'டாஸ்' ஜெயிக்குறதெல்லாம் எங்களுக்கு ஒரு 'மேட்டரே' கெடையாது...! 'ஃபைனல் மேட்ச்'ல நாங்க 'எப்படி' விளையாட போறோம் தெரியுமா...? - ஆஸ்திரேலியா 'கோச்' பகிர்ந்த தகவல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை அரை இறுதிச்சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஃபைனலுக்கு சென்றுள்ளது.

Advertising
>
Advertising

துபாயில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிச்சுற்றில் நேற்று பாகிஸ்தான் அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் அரையிறுதி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் எளிதில் சாய்த்து விடும் என்று கூறப்பட்டது.

ஆனால், அங்கு தான் ஒரு ட்விஸ்ட். இந்தியாவிற்கு பை பை சொன்ன பாகிஸ்தான் அணி அரை இறுதி சுற்றில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியுற்று இறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிற்கு 176 என்ற சவாலான இலக்கை நிர்ணயித்தது. அதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதலில் ஆடியதை பார்த்தால் எல்லோரும் பாகிஸ்தான் தான் ஜெயிக்கும் என்றே உறுதிப்படுத்தினர்.

ஆனால், வார்னர் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா 96-5 என்ற இலக்கில் இருக்கும் போது அவுட் ஆனார். அப்போது ஆஸ்திரேலியாவின் மேத்யூ வேட்டும், மார்கஸ் ஸ்டோனிசும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி பெற வைத்தனர்.

இறுதப் போட்டிக்கு நுழைந்த ஆஸ்திரேலியா அண்டை நாடான நியூஸிலாந்துடன் மோதுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், 'இறுதிப் போட்டியில் டாஸ் போன்ற காரணிகளை பொருட்படுத்தாமல் வெற்றி பெறும் மனநிலையுடன் ஆஸ்திரேலியா வரும்' என கூறியுள்ளார்

அதோடு, 'நாங்கள் தொடர்ந்து பயமற்ற கிரிக்கெட்டை விளையாடுவோம். நியூசிலாந்து உண்மையிலேயே நல்ல அணி. அவர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து முடிக்கிறார்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது முதலில் பந்துவீசினாலும், எந்த சூழ்நிலையிலிருந்தும் வெல்ல முடியும் என்ற மனநிலை எங்களுக்கு உள்ளது. இருப்பினும் நியூசிலாந்தை சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்' எனவும் ஜஸ்டின் லாங்கர் குறிப்பிடுள்ளார்.

AUS, COACH, JUSTIN LANGER, TOSS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்