'இதெல்லாம் பாத்து கத்துக்கங்க அஸ்வின்!' - ரசிகரின் அட்வைஸ்.. 'ஒருநாள் வெயிட் பண்ணுங்க.. ரெஸ்ட் எடுத்துட்டு..' - அஸ்வினின் 'வைரல்' பதில்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபந்துவீச்சுக்கு முன் எதிர்முனையில் ரன் அவுட் செய்வது குறித்து ஓரிரு நாட்களில் பேசுவதாக ரசிகர் ஒருவருக்குப் இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பதிலளித்துள்ளார்.
மான்கேடிங் (Mankdaing) என்று சொல்லப்படும் பந்துவீச்சாளர், பந்தை வீசும் முன், அவர் பக்கம் இருக்கும் பேட்ஸ்மேன் க்ரீஸை தாண்டி வந்தால் ரன் அவுட் செய்வதே மான்கேட் ரன் அவுட் முறை கிரிக்கெட் விதிமுறைகளின் படி சரியானதுதான் என்றாலும், விளையாட்டில் அது போட்டி மனப்பான்மைக்கு எதிரானது என்கிற கருத்தும் உள்ளது.
அப்படித்தான் கடந்த வருடம் ஐபிஎல் போட்டியில், தன் பக்கம் இருந்த ஜாஸ் பட்லர் க்ரீஸை விட்டு வெளியேறியதும், பந்து வீச்சுக்கு முன் அஸ்வின் அவரை ரன் அவுட் செய்தது பெரிய சர்ச்சையைக் கிளப்பியதை அடுத்து இன்று வரை அஸ்வின் செய்தது சரியா தவறா என்கிற விவாதமும் கிரிக்கெட் உலகில் ஓயாமால் நடைபெற்று வருகிறது. அஸ்வினோ தான் செய்தது விதிமுறைகளின் படி சரி என்பதில் உறுதியுடன் இருக்கிறார். அப்போது பஞ்சாப் அணியில் இருந்த அஸ்வின் இம்முறை டெல்லி அணிக்கு விளையாடவுள்ள நிலையில், டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங், இதுபோல ரன் அவுட் செய்வதை விமர்சித்ததுடன், அஸ்வினுடன் இதுபற்றி கண்டிப்பாக பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அண்மையில் புதன்கிழமை அன்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டியில், பந்துவீசும் முனையில் இருந்து க்ரீஸை விட்டு இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் வெளியே வந்த போது, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் அவரை ரன் அவுட் செய்யாமல் எச்சரித்தார்.
இதை வைத்த்து ரசிகர் ஒருவர் “இதனைக் கற்றுக் கொள்ளுங்கள் அஸ்வின். இப்படி தான் விளையாடுங்கள்” என்று அஸ்வினைக் குறிப்பிட்டு ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு அஸ்வின், "எனக்கு நியாயமாக சண்டை போடுவது பிடிக்கும். எனினும் நாளை மறுநாள் வரை பொறுத்திருங்கள். ஒரு நாள் ஓய்வுக்கு பின் இதுகுறித்து உங்களிடம் பேசுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். வரும் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 தொடங்குவதால், அஷ்வின் உள்ளிட்ட பல வீரர்கள் தற்போது அங்கு முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவரு மாதிரிலாம் சிக்ஸர் அடிக்க ஆளே இல்ல...' 'இன்னிக்கு தேதிக்கு World நம்பர் 1 ஆல்-ரவுண்டர் அவர் தான்...' ரிங்கு சிங் புகழாரம்...!
- "லெக் ஸ்பின்னர்களை சமாளிக்கணும்!".. "இவர் இல்லாதது CSK அணிக்கு பின்னடைவுதான்!".. பிரபல வீரரின் கணிப்பு!
- ஐபிஎல்-இல் களமிறங்கும் தமிழகத்தைச் சேர்ந்த 11 வீரர்கள்!.. எந்த அணியில் யார்?.. ட்ராக் ரெக்கார்ட் என்ன?
- ரெய்னாவுக்கு பதிலா தமிழக வீரருக்கு 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்... மொத மேட்சுல யாரெல்லாம் வெளையாட போறாங்க?
- ‘இன்னும் 3 நாள்தான்’.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஃபீவர்.. முதல்முறையா வெளியான ‘வேறலெவல்’ போட்டோ..!
- '60 மேட்ச்கள்.. 'அரங்கத்தில் அமர்ந்து பார்க்கும் உணர்வுடன்'.. லைவ் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பெற்றுள்ள பிரபல OTT சேனல் இதுதான்!
- வரிசை கட்டும் சிக்கல்களால்... 3-வது வீரரையும் 'இழக்கும்' சிஎஸ்கே காரணம் என்ன?
- 'ஒரு மேட்ச் கூட நாங்க தோற்க மாட்டோம்...' 'கப்பும் இந்த தடவ நாங்க தான்...' - செம confidence-ல் 'அந்த' டீம் கேப்டன்...!
- 'விடாம மிரட்டுறாங்க'... 'ஒவ்வொரு நொடியும் பயமா இருக்கு'... 'பிரபல வீரரின் மனைவி கொடுத்த'... 'அதிர்ச்சி புகாரால் பெரும் பரபரப்பு!'...
- Video: என்ன ஸ்பீடு...! 'ப்ராக்டிஸ் மேட்ச்ல மிடில் ஸ்டம்பு ரெண்டா உடைஞ்சு தெறிச்சிடுச்சு...' யார் இந்த ஃபாஸ்ட் பவுலர்...? - வைரலாகும் வீடியோ...!