'நைட் ரொம்ப டிஸ்டர்பா ஃபீல் பண்ணினேன்...' 'நான் அந்த ஸ்கூலோட பழைய ஸ்டூடன்ட்னு மட்டும் இல்ல...' - பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் விவகாரத்தில் அஸ்வின் 'பரபரப்பு' கருத்து...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை கே.கே. நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த ராஜகோபாலன் என்பவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புவது, அரைகுறை ஆடையுடன் வந்து வகுப்பு நடத்துவது என பாலியல் ரீதியாக தொடர்ந்து மாணவிகளை தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

'நைட் ரொம்ப டிஸ்டர்பா ஃபீல் பண்ணினேன்...' 'நான் அந்த ஸ்கூலோட பழைய ஸ்டூடன்ட்னு மட்டும் இல்ல...' - பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் விவகாரத்தில் அஸ்வின் 'பரபரப்பு' கருத்து...!

தற்போது போக்சோ உள்ளிட்ட வழக்குகளின் கீழ் ஆசிரியா் ராஜகோபால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணையில் சும்மா ஜாலிக்காக செய்தேன், இப்படி விபரீதமாக மாறும் என்று நினைக்கவில்லை என வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்குள்ள சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பதிவில், “PSBB பள்ளியின் பழைய மாணவராக மட்டுமல்லாமல், இரு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாகவும் தொந்தரவான இரவுகளைக் கழித்தேன்” என அதில் கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்