ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு.. இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்! மேட்ச் எங்கே? எப்போ?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புதுடெல்லி: ஆசியக் கோப்பை 2022க்கான  அட்டவணையை ஆசிய கிரிக்கெட் வாரியம் (ஏசிசி) இன்று வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "World Cup'ல தோனி'ய பாத்ததும்.." பாகிஸ்தான் வீரர் ஆசையா கேட்ட விஷயம்.. கொஞ்சம் கூட யோசிக்காம 'தல' கொடுத்த சர்ப்ரைஸ்.!

ஆசிய கோப்பை 2022க்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) தலைவர் ஜெய் ஷா அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறும் போட்டியின் முழு அட்டவணையை ஷா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 28 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா மோதவுள்ளது.

இந்த தொடர் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் அந்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.

ஆசிய கோப்பை 2022 அட்டவணை:

குரூப் போட்டிகள்

1. இலங்கை vs ஆப்கானிஸ்தான் - குரூப் பி போட்டி - ஆகஸ்ட் 27
2. இந்தியா vs பாகிஸ்தான் - குரூப் ஏ போட்டி - ஆகஸ்ட் 28
3. பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் - குரூப் பி போட்டி - ஆகஸ்ட் 30
4. இந்தியா vs குவாலிஃபையர் - குரூப் ஏ போட்டி - ஆகஸ்ட் 31
5. இலங்கை vs பங்களாதேஷ் - குரூப் பி போட்டி - செப்டம்பர் 1
6. பாகிஸ்தான் vs குவாலிஃபையர் - குரூப் ஏ போட்டி - செப்டம்பர் 2

சூப்பர் 4 போட்டிகள்

7. B1 vs B2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 3
8. A1 vs A2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 4
9. A1 vs B1 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 6
10. A2 vs B2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 7
11. A1 vs B2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 8
12. B1 vs A2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 9
13. இறுதி (1வது சூப்பர் 4 vs 2வது சூப்பர் 4) - செப்டம்பர் 11

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | இன்ஸ்டா லைவில் சர்ப்ரைஸாக வந்த தோனி.. ரிஷப் பந்த் வைத்த 'Request'.. அடுத்த செகண்ட்டே நடந்த வைரல் 'சம்பவம்'..

CRICKET, ASIA CUP, ASIA CUP T20 SERIES, ASIA CUP T20 SERIES 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்