ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. இந்தியா - பாகிஸ்தான் கூட மோதப்போகும் மூன்றாவது அணி! இவர்களா? முழு விவரம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆசியக் கோப்பை 2022 தொடரில் ஏ பிரிவில் மூன்றாவது அணியாக ஆசிய அணி ஒன்று இணைந்துள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "நீங்க அதுகிட்ட கோபப்பட்டா இதான் நடக்கும்".. 13 வயசு சென்னை சிறுவன் உருவாக்கிய ரோபோ.. மிரண்டு போன நெட்டிசன்கள்

ஆசிய கோப்பை 2022 ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறுகிறது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான போட்டியுடன் தொடங்குகிறது. ஆகஸ்ட் 28 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியா மோதவுள்ளது.

இந்த தொடர் முதலில் இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் அந்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணி நடப்பு சாம்பியனாக உள்ளது.

ஹாங்காங், குவைத், சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் ஆகஸ்ட் 20 முதல் 26 வரை நடைபெற்று வரும் தகுதிச் சுற்றில் ஆடி வருகின்றன.  இந்த தகுதிச் சுற்றின் மூலம் தற்போது முதல் அணியாக ஹாங்காங் பிரதான சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் ஏ பிரிவில் பங்கேற்கின்றன.

இந்தியா & பாகிஸ்தானுடன் ஹாங்காங் அணி குரூப் A இல் உள்ளனர். ஆகஸ்ட் 28, ஞாயிற்றுக்கிழமை, துபாயில் இந்திய அணியை பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.

அடுத்த, B பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் உள்ளன.

ஆகஸ்ட் 27 அன்று தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இலங்கை எதிர்கொள்கிறது.

ஆசிய கோப்பை 2022-ன் படி, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும்.

எனவே, ஏ பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால், செப்டம்பர் 4 ஆம் தேதி துபாயில் நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதலாம்.


ஆசிய கோப்பை 2022 அட்டவணை:

குரூப் போட்டிகள்

1. இலங்கை vs ஆப்கானிஸ்தான் - குரூப் பி போட்டி - ஆகஸ்ட் 27
2. இந்தியா vs பாகிஸ்தான் - குரூப் ஏ போட்டி - ஆகஸ்ட் 28
3. பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் - குரூப் பி போட்டி - ஆகஸ்ட் 30
4. இந்தியா vs ஹாங்காங் - குரூப் ஏ போட்டி - ஆகஸ்ட் 31
5. இலங்கை vs பங்களாதேஷ் - குரூப் பி போட்டி - செப்டம்பர் 1
6. பாகிஸ்தான் vs ஹாங்காங் - குரூப் ஏ போட்டி - செப்டம்பர் 2

சூப்பர் 4 போட்டிகள்


7. B1 vs B2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 3
8. A1 vs A2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 4
9. A1 vs B1 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 6
10. A2 vs B2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 7
11. A1 vs B2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 8
12. B1 vs A2 - சூப்பர் 4 போட்டி - செப்டம்பர் 9
13. இறுதி (1வது சூப்பர் 4 vs 2வது சூப்பர் 4) - செப்டம்பர் 11

அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | "இது பேட்ட பாயுற நேரம்".. தீவிர பயிற்சியில் இறங்கிய ரெய்னா.. வைரலாகும் வீடியோ.. பின்னணி என்ன??

CRICKET, ASIA CUP, ASIA CUP SERIES 2022, HONGKONG

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்