"'8 - 9' நாளைக்கு சரியா தூங்கவேயில்ல.. என் 'கிரிக்கெட்' வாழ்க்கையே 'போச்சு'ன்னு நெனச்சேன்.." வேதனையுடன் மனம் திறந்த 'அஸ்வின்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தினால், பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், வேறு ஏதேனும் நாடுகளில் வைத்து நடத்தவும் பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. முன்னதாக, கொரோனா தொற்றின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்படுவதற்கு முன்பாகவே, டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ஐபிஎல் போட்டியில் இருந்து பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், தூரத்து உறவினர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டி, பாதியில் விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்திலும் அஸ்வின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த சமயத்தில், தான் மன ரீதியாக எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருந்தேன் என்பது பற்றி அஸ்வின் தற்போது மனம் திறந்துள்ளார். 'நான் இருக்கும் பகுதியிலுள்ள பெரும்பாலானோர், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர். எனது சகோதரர்கள் சிலர் கூட, கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனை நினைத்து, ஐபிஎல் தொடருக்கு மத்தியில், கிட்டத்தட்ட 8 - 9 நாட்கள் வரை நான் சரிவர தூங்கவில்லை. தூக்கம் இல்லாமல், ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கி ஆடியது, எனக்கு அதிக மன அழுத்தத்தைக் கொடுத்தது. அதன் பிறகு தான், ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகலாம் என முடிவு செய்தேன். நான் ஐபிஎல் போட்டிகளை விட்டு பாதியில் விலகுவதால், இனிமேல் எனக்கு கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்குமா என்று கூட நான் யோசித்தேன்.
ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படலாம் என முடிவு செய்து பின் விலகினேன். தொடர்ந்து, எனது வீட்டில் உள்ளவர்கள், மெல்ல மெல்ல குணமடைந்து வந்த போது, மீண்டும் ஐபிஎல் போட்டிகள் ஆடலாம் என கருதினேன். ஆனால், அதற்குள் ஐபிஎல் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டது' என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
பூதாகரமான லட்சத்தீவு விவகாரம்!.. மௌனம் கலைத்த முதல்வர் ஸ்டாலின்!.. என்ன செய்யப் போகிறது மத்திய அரசு?
தொடர்புடைய செய்திகள்
- "இத்தன நாள் அவரு திணறுறதுக்கு காரணம் இதான்.. 'தோனி'யோட மிரட்டல் 'அடி'ய கூடிய சீக்கிரம் பாப்பீங்க.." வேற லெவல் வெயிட்டிங்கில் 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
- "அந்த நேரம் எனக்குள்ள 'பயமே' வந்துருச்சு.." பேட்டிக்கு நடுவே 'கண்ணீர்' விட்டு அழுத 'KKR' வீரர்.. மனதை உருக வைத்த 'வீடியோ'!!
- 'இளம்' வீரருக்கு 'அஸ்வின்' கொடுத்த 'அட்வைஸ்'.. "அய்யய்யோ, என்னால பண்ண முடியாது'ங்க.. அப்புறம் ஊரே என்ன வில்லன் மாதிரி பார்க்கும்.." பயத்தில் உளறிய 'வீரர்'!!
- 'ஐபிஎல்' பற்றி வெளியான அசத்தல் 'அப்டேட்'.. "இனி இருக்குற 'மேட்ச்' எல்லாம் நடத்த இதான் நல்ல 'ஐடியா'.." 'பிசிசிஐ' அதிகாரி சொன்ன 'மாஸ்' தகவல்!!
- "'ஐபிஎல்' திருப்பி start ஆகுறப்போ, அவரால வர முடியலன்னா.. உங்க 'டீம்'க்கு தான் நல்லது.." 'ஆகாஷ் சோப்ரா' சொன்ன 'விஷயம்'.. ஒரு 'கேப்டன்'னு கூட பாக்காம இப்படியா சொல்றது??..
- "'ஈ சாலா கப் நம்தே' ன்னு சுத்திட்டு இருந்த, RCB 'ஃபேன்ஸ்' தான் இப்போ பாவம்.." 'இர்பான் பதான்' சொன்ன 'விஷயம்'.. "இருக்குற சோகத்துல இது வேறயா??.."
- VIDEO: ‘குழந்தைகளுக்கு 3-4 நாளா காய்ச்சல்’!.. ‘அப்பாவுக்கு ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சிட்டே இருந்துச்சு’.. அஸ்வின் அவசர அவசரமாக வீடு திரும்பியதற்கு பின்னால் இருக்கும் சோகக்கதை..!
- "'டீம்'ல உள்ள சிலருக்கு கொரோனா 'பாசிட்டிவ்'ன்னு சொன்னாங்க.. அந்த சமயத்துல நாங்க பண்ணது இதான்.." 'சிஎஸ்கே'வில் நடந்தது என்ன??.. 'தீபக் சாஹர்' பகிர்ந்த 'விஷயம்'!!
- "என் மேல அவங்களுக்கு அதிக 'பாசம்'.. அதுக்காக தான் இத சொல்றேன்.." 'இந்திய' மக்கள் மீதுள்ள அக்கறையில் 'பேட் கம்மின்ஸ்' சொன்ன 'விஷயம்'!!
- "அத்தன வருஷமா 'சான்ஸ்' கிடைக்காதப்போ, நான் பட்ட 'வேதனை' இருக்கே.." என்னால 'control' கூட பண்ண முடியல.." வலியுடன் 'புஜாரா' சொன்ன 'விஷயம்'!!