"நடுவுல ஒரு 6 மாசம் அஷ்வின் விளையாடவே இல்ல... ஏன்"?.. "அவர் கிரிக்கெட் கரியர் காலி ஆகியிருக்கும்!".. ஐசிசி பாரபட்சமா?.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

"சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இந்திய வீரர் அஷ்வினுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர் தப்பிவிட்டார்" எனும் திடுக்கிடும் குற்றச்சாட்டை பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் முன்வைத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளராக இருந்து சிறப்பாக செயல்பட்டவர் சயீத் அஜ்மல். ஆனால் அவருடைய பவுலிங் ஆக்ஷன் கிரிக்கெட் விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து சயீத் அஜ்மல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இது குறித்து Cricwick இணையதளத்துக்கு பேட்டியளித்த சயீத் அஜ்மல், "கிரிக்கெட்டின் விதிமுறைகளை யாரைக் கேட்டு அடிக்கடி மாற்றுகிறார்கள் எனத் தெரியவில்லை. நான் கடந்த 8 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடுகிறேன். ஆனால், அனைத்து விதிமுறைகளும் என் மீதே விழுந்தது.

அந்தக் காலக்கட்டத்தில் அஷ்வின் ஏன் 6 மாத காலம் விளையாடாமல் இருந்தார்? அப்போது அவருக்கு உதவி அளிக்கப்பட்டது. அவருடைய பவுலிங் முறை மாற்றப்பட்டது. அதனால் ஐசிசியின் தடையில் இருந்து அவர் தப்பித்தார். ஆனால், பாகிஸ்தான் வீரர்களை பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களுக்கு பணம்தான் முக்கியம்" என்ற அதிர்ச்சிக்குரிய தகவலை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சயீத் அஜ்மல், "2011 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் என்னுடைய பந்துவீச்சில் சச்சின் டெண்டுல்கர் LBW ஆனார். ஆனால், அம்பயர் அவருக்கு அவுட் கொடுக்கவில்லை. அதனால் அவர் சிறப்பாக தொடர்ந்து விளையாடினார். இப்போது கூட டிவியில் அதைப் பார்க்கும்போது மிக எளிதாக தெரியும் சச்சின் அவுட்டென்று. இது தொடர்பாக பலரும் என்னிடம் கேட்டுவிட்டனர், ஆனால், அம்பயரின் அந்த முடிவு குறித்து என்னிடம் பதில் இல்லை என்று தெரிவித்தார். சயீத் அஜ்மலின் இந்த குற்றச்சாட்டுகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்