'உங்களால மட்டுந்தான் பாஜி எனக்கு இது சாத்தியமாச்சு...'- உருகும் அஸ்வின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆன அஸ்வின் தன்னை ஊக்கப்படுத்தியதே ஹர்பஜன் சிங் தான் என நன்றியுடன் பெருமை பேசியுள்ளார்.

'உங்களால மட்டுந்தான் பாஜி எனக்கு இது சாத்தியமாச்சு...'- உருகும் அஸ்வின்!
Advertising
>
Advertising

கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது ஹர்பஜன் சிங்-ன் அதிரடியைப் பார்த்த பின்னர் தான் off-spin விளையாடுவதற்கான உத்வேகமே ஏற்பட்டது என இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Ashwin thanks Harbhajan Singh for inspiring him

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். கான்பூர் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்து உள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களுள் இதுவரையில் 417 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்-ஐ பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார்.

Ashwin thanks Harbhajan Singh for inspiring him

அஸ்வின் இதுவரையில் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினின் ஸ்டிரைக் ரேட் 52.4 ஆகவும் சராசரி 24.56 ஆகவும் உள்ளது. பந்துவீச்சில் மட்டுமல்லாது டெஸ்ட் பேட்டிங்-கிலும் அசத்தியுள்ள அஸ்வின் இதுவரையில் 2685 ரன்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் ஹர்பஜன் சிங் குறித்து அஸ்வின் கூறுகையில், “இது மிகப்பெரிய சாதனை. கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி விளையாடிய போது ஹர்பஜன் சிங்-ன் அதிரடியைப் பார்த்த பின்னர் தான் off-spin விளையாடுவதற்கான உத்வேகமே ஏற்பட்டது. ஆனால், அன்று நான் ஒரு off-spinner ஆவேன் என நினைக்கவில்லை. ஆனால், இன்று இத்தகைய சாதனையைப் படைத்து இருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி பாஜி பா” எனக் குறிப்பிட்டுள்ளார்.

CRICKET, RASHWIN, HARBHAJAN SINGH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்