VIDEO: 'நீ படிச்ச ஸ்கூல்ல.. நான் வாத்தியார் டா'!.. கிண்டலும், கேலியும் செய்த இங்கிலாந்து பாய்ஸ்!.. வாத்தி ரெய்டு விட்ட அஷ்வின்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முதல் இன்னிங்ஸில் கிண்டல் செய்த அயல்நாட்டு வீரர்களுக்கு 2வது இன்னிங்ஸிலேயே பதிலடி கொடுத்து மிரட்டியுள்ளார் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது. இந்த போட்டிகள் ஆகஸ்ட் 4 முதல் செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தற்போது இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் சாமர்செட் அணிக்கு எதிரான போட்டியில் சர்ரே அணி சார்பில் ரவிச்சந்திரன் அஷ்வின் விளையாடி வருகிறார். சர்வதேச அணிக்காக விளையாடி வரும் அஷ்வின், உள்ளூர் போட்டிகளில் விக்கெட்களை அள்ளிக்கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக நடந்தது. முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்களை வீசிய அஷ்வின், 99 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.  

முதல் நாள் முதல் செஷனில் அஷ்வின் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இருந்தார். சொந்த அணி வீரர் என்றும் பார்க்காத சர்ரே அணி, அஷ்வினின் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து இன்னும் விக்கெட் எடுக்கவில்லை என பதிவிட்டு சிரிக்கும் எமோஜியை போட்டு கிண்டலடித்தது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியது. 

இந்நிலையில், ஆட்டத்தின் 2வது இன்னிங்ஸில் அனைத்து கிண்டல்களுக்கும் அஷ்வின் பதிலடி கொடுத்துள்ளார். தொடக்கம் முதலே சிறப்பாக பந்துவீசிய அஷ்வின் எதிரணி பேட்டிங் வரிசையை அடுத்தடுத்து காலி செய்தார். முதல் இன்னிங்ஸில் 43 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டை எடுத்த அஸ்வின், 2வது இன்னிங்ஸில் வெறும் 15 ஓவர்களை மட்டுமே வீசி 6 விக்கெட்களை சாய்த்தார். மேலும், 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

அஷ்வினின் இந்த கம்பேக்கை பார்த்து கிண்டல் செய்த சர்ரே அணி வீரர்கள் வாயடைத்துப் போய் நின்றனர். இது, டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வின் எடுக்கும் 49வது Fifth wicket haul ஆகும். அதே போல கவுண்டி போட்டிகளில் அஸ்வின் எடுக்கும் 7வது five wicket haul ஆகும். இங்கிலாந்து தொடருக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், அஷ்வின் சிறப்பாக பந்துவீசி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்