கோலி கேப்டன்ஷி விலகல்.. ‘இனி அடுத்து வர்றவங்களுக்கு தலைவலி தான்’.. அஸ்வின் உருக்கமான பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியதை அடுத்து இனி அடுத்து புதிதாக வருபவர்களுக்கு தலைவலிதான் என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றது.

இதனை அடுத்து டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென விராட் கோலி அறிக்கை வெளியிட்டார். ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகியிருந்தார். இந்த சூழலில் டெஸ்ட் அணியில் இருந்தும் அவர் விலகியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கேப்டன் எப்படி அணியை வழிநடத்தினார், என்னென்ன சாதனைகளை செய்து காட்டினார் என்பது தான் மிகவும் முக்கியம். அதுதான் அவரைப் பற்றி பேச வைக்கும். இதை அனைத்தையும் தாண்டி கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக விராட் கோலி இருந்துள்ளார். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நீங்கள் பெற்றுக்கொடுத்த வெற்றியைப் பற்றி இனி வருபவர்கள் பேசுவார்கள்.

வெற்றி என்பது சாதாரணமான ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் அறுவடைக்கு முன் விதைகளை எப்போதும் சீராக விதைக்க வேண்டும். அப்படி விதைகளை விதைத்து நீங்கள் ஒரு தரத்தை உருவாக்கி வைத்துள்ளீர்கள். இதே எதிர்பார்ப்பு இனி வருபவர்கள் இடமும் இருக்கும்.

உங்களுக்கு அடுத்து கேப்டனாக வருபவருக்கு உங்கள் சாதனைகளால் பெரிய தலைவலியை விட்டுச் சென்றுள்ளீர்கள். இது மிகவும் அற்புதம். இதுதான் கேப்டனாக உங்களிடமிருந்து நான் ஒரு பாடமாக கற்றுக் கொள்கிறேன். நாம் ஒவ்வொருவரும் ஒரு இடத்தை விட்டு கண்டிப்பாக வெளியேறி தான் ஆகவேண்டும். ஆனால் அந்த இடத்தை வருங்காலம் தான் மேலே கொண்டு செல்லும்’ என அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்