‘நிச்சயம் அவர் அதுக்கு தகுதியானவர் தாங்க’.. நியூசிலாந்து ப்ளேயருக்காக ட்விட்டரிடம் ‘வேண்டுகோள்’ வைத்த அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேலுக்காக ட்விட்டர் நிறுவனத்திடம் அஸ்வின் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

‘நிச்சயம் அவர் அதுக்கு தகுதியானவர் தாங்க’.. நியூசிலாந்து ப்ளேயருக்காக ட்விட்டரிடம் ‘வேண்டுகோள்’ வைத்த அஸ்வின்..!
Advertising
>
Advertising

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் கான்பூர் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

Ashwin requests Twitter to verify Ajaz Patel's account

இதில் இந்தியா தங்களது முதல் இன்னிங்சில் 325 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 276 ரன்களும் எடுத்து டிக்ளேர் செய்தது. அதேபோல் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 62 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 167 ரன்களும் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் மயங்க் அகர்வால் முதல் இன்னிங்சில் 150 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 62 ரன்களும் எடுத்தார். அதனால் இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

அதுபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் மற்றும் இரண்டாவது இரண்டாவது இன்னிங்சை சேர்த்து மொத்தம் 8 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதேபோல் முதல் டெஸ்ட் போட்டியிலும் 6 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

அதேபோல் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி உலக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் இங்கிலாந்து வீரர் ஜிம் லேக்கர் மற்றும் இந்திய வீரர் அனில் கும்ப்ளே ஆகிய இருவர் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் அஜாஸ் படேலும் 3-வது வீரராக இணைந்துள்ளார்.

இதனால் அஜாஸ் படேலுக்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் ராகுல் டிராவிட், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் அஜாஸ் படேலுக்காக ட்விட்டர் நிறுவனத்திடம் அஸ்வின் ஒரு வேண்டுகோளை வைத்துள்ளார். இதுகுறித்து ட்வீட் செய்த அவர், ‘அஜாஸ் படேல் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதனால் நிச்சயம் வெரிஃபைட் (Verified) வாங்குவதற்கு அவர் தகுதியானவர்தான்’ என அஸ்வின் பதிவிட்டுள்ளார்.

RAVICHANDRAN ASHWIN, TWITTER, INDVNZ, AJAZPATEL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்