‘தேங்க்ஸ் டா தம்பி’!.. ‘நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்’.. ஆமா அவருக்கு தமிழ் தெரியுமா..? நெட்டிசன்களை பரபரப்பாக்கிய அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அஸ்வின் தமிழில் பதிலளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. இதனை அடுத்து நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்று அடிலெய்டு தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது.

இந்திய அணியில் பேட்டிங்கை பொறுத்தவரை கேப்டன் ரஹானே, சுப்மன் ஹில், ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதேபோல் பந்துவீச்சை பொறுத்தவரை அஸ்வின், பும்ரா, உமேஷ் யாதவ் ஆகிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக விளையாடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக இளம்வீரர் முகமது சிராஜ் களமிறங்கினார். மூத்த வீரர்களுக்கு மத்தியில் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை சிராஜ் திணறடித்தார். இப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளிலும் சமனில் உள்ளன.

இந்த நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து முகமது ஷமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்த தமிழக வீரரான அஸ்வின், ‘தேங்கஸ் டா தம்பி. நீ இல்லைனு ஒரு சின்ன வருத்தம்’ என தமிழில் பதிவிட்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் ஷமிக்கு தமிழ் தெரியுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர். ஒரு சிலர், அவர் ஹிந்தியில் பதிவிட்டதற்காக, அஸ்வின் தமிழில் பதிலளித்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர். முகமது ஷமி தனது வாழ்த்து பதிவில் கடைசியாக ஹிந்தியில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஷமியும், அஸ்வினும் தமிழில் பேசியுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதை அஸ்வின் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். அதில், ‘அது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி, அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை விரைந்து ஆல் அவுட் செய்து, குறைந்த டார்கெட்டை சேஸ் செய்து வெற்றிபெற நினைத்தோம். அப்போது ஷமி பந்து வீசினார்.

அவரது ஓவரில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் பவுண்டரி விளாசினார். அப்போது ஷமியை தமிழில் திட்டினேன். அது அவரது காதில் விழுந்துவிட்டது. உடனே அவர் அது என்ன என என்னிடம் கேட்டார். நான் தமிழில் உன்னை திட்டியதாக கூறினேன். அவ்வளவுதான் அடுத்த பந்திலேயே அந்த பேட்ஸ்மேனை ஷமி அவுட்டாக்கினார். அப்போதிலிருந்து அவருடன் தமிழில் பேசும் போதெல்லாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது ஐபிஎல் போட்டியிலும் எதிரொலித்தது’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

News Credits: Puthiya Thalaimurai

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்