பல வருட காத்திருப்பின் வலி..! அஸ்வின் வீட்டுச் ‘சுவரில்’ எழுதிய வாசகம்.. ரசிகர்களை உருக வைத்த பதிவு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ அறிவித்தது. அதில் விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக் கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ராகுல் சஹார், அஸ்வின், அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதில் 4 வருடங்களுக்கு பிறகு வெள்ளைப் பந்துக்கான இந்திய கிரிக்கெட் அணியில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கடையாக 2017-ம் ஆண்டு நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் அஸ்வின் விளையாடி இருந்தார். அதன்பின்னர் இளம் வீரர்களின் வருகையால் அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.

இதனிடையே ஐபிஎல் தொடரில் விளையாடி தனது திறமை அஸ்வின் நிரூபித்து வருகிறார். கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்து அஸ்வின் வழி நடத்தினார். இதனை அடுத்து 2020-ம் ஆண்டில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் சார்பாக அவர் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் மீண்டும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து ட்விட்டரில் அஸ்வின் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ‘எல்லா குகையின் முடிவிலும் ஒளி இருக்கிறது. குகைக்கு இறுதியில் ஒளி இருக்கும் என்று நம்பிக்கையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே அந்த ஒளியை காணும் வாய்ப்பு கிடைக்கிறது’ என 2017-ம் ஆண்டு தனது வீட்டுச் சுற்றில் எழுதிய வாசகத்தை அஸ்வின் பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்