கேப்டன்ஷி பத்தி மட்டும் பேசிட்டு.. இதை பாராட்ட மறந்திடுறீங்க.. தோனி குறித்து அஸ்வின்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே கேப்டன் தோனியின் பினிஷிங் குறித்து அஸ்வின் புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

விடுஞ்சா ஐபிஎல் ஏலம்.. திடீர்னு விலகிய பஞ்சாப் அணியின் முக்கிய நபர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

ஐபிஎல் மெகா ஏலம்

ஐபிஎல் 15-வது சீசனுக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்து சிஎஸ்கே நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சிஎஸ்கே

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங் அணி 4 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவை வீழ்த்தி சிஎஸ்கே சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

அஸ்வின்

இந்த நிலையில் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி குறித்து தமிழகத்தை சேர்ந்தவரும் இந்திய சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் புகழ்ந்து பேசியுள்ளார். அதில், ‘ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக தோனி உள்ளார். கடந்த சீசன் உட்பட 4 சாம்பியன் பட்டங்களை சிஎஸ்கே அணி கைப்பற்றியுள்ளது. சிஎஎஸ்கே அணிக்காக பல சந்தர்பங்களில் பினிஷிங் ஷாட்களை அடித்துள்ளார். இதன்மூலம் அணியின் மன உறுதி உயர உதவியுள்ளார்.

தோனி

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியை மிகவும் நிலையான அணியாக மாற்றியுள்ளார். தோனியின் அமைதியான மற்றும் கூட்டு அணுகுமுறை சிஎஸ்கே ணிக்கு பல அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறது. அவரது கேப்டன் திறமை குறித்து பேசுபவர்கள் இது குறித்து  சரியாக பேசுவதில்லை’ என அஸ்வின் தெரிவித்தார்.

"செம பிளேயர் அவரு.. 'அரசியல்' பண்ணியே டீம்'ல இருந்து காலி பண்ணிட்டீங்க.." 'இந்திய' அணி பற்றிய புகாரால் பரபரப்பு

RAVICHANDRAN ASHWIN, PRAISE, CSK CAPTAIN, MS DHONI, IPL 2022 AUCTION, CSK CAPTAIN DHONI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்