ஹர்பஜன் சிங்கை ‘ஓவர்டேக்’ செய்த அஸ்வின்! கபில் தேவ்-க்குக்குப் பின் கிடைத்த கௌரவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் ஹர்பஜன் சிங்-ஐ பின்னுக்குத் தள்ளி கபில் தேவ்-க்கு பக்கத்தில் நின்றுள்ளார் அஸ்வின்.

Advertising
>
Advertising

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்களுள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். இன்று திங்கள் கிழமை கான்பூரில் நியூசிலாந்து- இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியின் 5-ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதால் டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்து உள்ளார். அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களுள் இதுவரையில் 417 விக்கெட்டுகள் வீழ்த்தி 3-வது இடத்தில் இருந்த ஹர்பஜன் சிங்-ஐ பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தை அஸ்வின் பிடித்துள்ளார். அஸ்வின் இதுவரையில் 80 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

ஹர்பஜன் சிங் 103 போட்டிகளில் 417 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வினின் ஸ்டிரைக் ரேட் 52.4 ஆகவும் சராசரி 24.56 ஆகவும் உள்ளது. பந்துவீச்சில் மட்டுமல்லாது டெஸ்ட் பேட்டிங்-கிலும் அசத்தியுள்ள அஸ்வின் இதுவரையில் 2685 ரன்களை எடுத்துள்ளார்.

இதில் 5 சதங்களும் அடங்கும். சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களுள் 13-வது இடத்தைப் பிடித்துள்ளார் அஸ்வின். ‘இந்திய அணியின் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய உயர் தர பந்துவீச்சாளர்க’ பட்டியலில் முதல் இடத்தில் 619 விக்கெட்டுகள் உடன் அணில் கும்ப்ளே, 2-ம் இடத்தில் 434 விக்கெட்டுகள் உடன் கபில் தேவ் இருக்கிறார்.

3-ம் இடத்தில் 418 விக்கெட்டுகள் வீழ்த்திய அஸ்வின் இருக்கின்றனர். அடுத்தடுத்து ஹர்பஜன் சிங், இஷாந்த் சர்மா, ஜாகிர் கான் ஆகியோர் உள்ளனர். சர்வதேச அளவில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி முத்தையா முரளிதரண் முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

CRICKET, RASHWIN, HARBHAJAN SINGH, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்