"எப்படிபட்ட 'ப்ளேயர்' தெரியுமாங்க அவரு??... அவர போய் 'டீம்'ல எடுக்காம விட்டுட்டீங்களே!..." ஃபீல் பண்ணிய 'கம்பீர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைப்பெற்று வரும் டெஸ்ட் தொடரில், இந்திய வீரர் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.

அது மட்டுமில்லாமல், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆல் ரவுண்டர் பெர்ஃபார்மன்ஸையும் அஸ்வின் காட்டியிருந்தார். இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டியில் ஆட அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. பேட்டிங், பவுலிங் என இரண்டு துறையிலும் சிறந்து விளங்கும் அஸ்வின், கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் ஆடியதேயில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட, அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். இந்நிலையில், அஸ்வினுக்கு டி 20 அணியில் இடம் கிடைக்காமல் போனது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 'அஸ்வின் டெஸ்ட் தொடரில் 400 விக்கெட்டுகளை நெருங்கி வருகிறார். அதே வேளையில், டெஸ்ட் போட்டியில் 5 சதமும் இதுவரை அவர் அடித்துள்ளார். இருந்த போதும், டி 20 போட்டிகளில் ஆட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அவர் ஒரு தரமான பந்து வீச்சாளர். அதில், பல நுட்பமான மாறுபாடுகளையும் காட்டக் கூடிய திறமை உடையவர். கிரிக்கெட் உலகில் அவர் கண்டுள்ள அனுபவம் இன்று வரை மிகப்பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


அவர் அணியில் இடம்பெறாமல் போனதை நம்பவே முடியவில்லை' என கம்பீர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்