பாகிஸ்தான் அணியில இவங்க 3 பேரையும் மறக்கவே முடியாது!- அஸ்வின்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத மேட்ச் வின்னராக இருக்கக் கூடியவர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழரான இவர், தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சாதனை மேல் சாதனை புரிந்து வருகிறார்.
வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இனி விளையாடுவார் என்று பலர் கூறிய நிலையில், மீண்டும் டி20 உலகக் கோப்பையில் களமிறங்கி மிரள வைத்தார். கூடிய விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் கம்-பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்வினின் ஒருநாள் கம்-பேக் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ‘அஸ்வின் தவிர்க்க முடியாத கிரிக்கெட் வீரர். அவரை நீங்கள் இனி ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று புறந்தள்ளவே முடியாது’ என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இதனால் எதிர் வரும் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அஸ்வின் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல் என்று பல இளம் சுழற் பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்று ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். ஆனால், யாராலும் அஸ்வினின் தரத்துக்கும் கன்சிஸ்டன்ஸிக்கும் அருகில் வர முடியவில்லை. உள்ளூரோ, வெளிநாடோ… எந்த பிட்ச்சாக இருந்தாலும் தன் ஆதிக்கத்தை அஸ்வின் நிலைநாட்டுவார்.
விளையாட்டைத் தாண்டி களத்துக்கு வெளியேயும் மிகவும் சகஜமாக பழகக்கூடியவர் அஸ்வின். தன் யூடியூப் சேனல் மூலம் சக கிரிக்கெட் வீரர்களுடனும், சினிமா நட்சித்திரங்களுடனும் தொடர்ந்து உரையாடி மக்களை மகிழ்வித்து வருகிறார் அஸ்வின்.
இப்படி ‘சகலகலாவல்லவன்’ ஆக இருக்கும் அஸ்வின், சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ஒரு ரசிகர், ‘தற்போது உள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் யார் யார்?’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு அஸ்வின், ‘பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை முகமது ரிஸ்வான் பற்றி நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அவரது திறமை குறித்தும், பாகிஸ்தான் அணிக்கு அவர் கொடுக்கும் வலிமை குறித்தும் நான் பலரிடம் சொல்லி வருகிறேன். அதே நேரத்தில் அந்த அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் பாபர் அசாம் தான். சமீபத்தில் கூட அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடித்த சதத்தை என்னால் மறக்கவே முடியாது.
இவர்கள் இருவரைத் தவிர ஷாஹீன் ஷா அப்ரீடி மிகத் திறமை வாய்ந்த வீரர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் எப்போதுமே திறன் வாய்ந்த வீரர்கள் அதிகம். தற்போதும் அது அப்படியே தொடருகிறது’ என்று வெளிப்படையான பதிலைக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம் தான், தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தர வரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அவர் 3 ஆம் இடத்தில் இருந்து வருகிறார். வெறும் 27 வயதே ஆகும் பாபர் அசாம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிகம் கவனிக்கப்படும் வீரராக உருவெடுத்து உள்ளார்.
முகமது ரிஸ்வான், பாகிஸ்தானின் ‘இளம் புயல்’ ஆக திகழ்கிறார். அதிரடி மற்றும் தொடர் ரன் குவிப்புக்குப் பெயர் போனவராக இருக்கிறார் ரிஸ்வான். அப்ரீடியும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் பவுலர்களில் முக்கியமானவராக இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "பாவம்யா 'கோலி'!.. 'அந்த' ஒரு விஷயத்துக்காக எவ்ளோ 'ஃபீல்' பண்ணி இருப்பாரு தெரியுமா?".. விடாது தொடரும் 'சர்ச்சை'!!
- "அந்த ஒரு 'தப்ப' மட்டும் செஞ்சுடாதீங்க.." 'இந்திய' அணி எடுக்கப் போகும் 'முடிவு'?.. டென்ஷன் ஆன 'ஆகாஷ் சோப்ரா'!!
- 'பட் அவரோட ஆட்டிட்யூட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு': தொடரும் விராட் கோலி- சவுரவ் கங்குலி மோதல்
- ரோகித் சர்மா போட்டோவுடன் டுவிட்டரில் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. மறுபடியும் மறைமுகமாக கோலியை சீண்டுகிறதா பிசிசிஐ..?
- "அவரு அப்படி நெனச்சதே இல்ல.." புதிதாக எழுந்த 'குரல்'.. 'கோலி' விவகாரத்தில் 'முடிவு' கிடைக்குமா??
- "இதான் உங்க 'கடைசி' சான்ஸ்!!.. வேற வழியே இல்ல சொல்லிட்டேன்!.." எச்சரித்த 'முன்னாள்' வீரர்.. இக்கட்டான நிலையில் 'கோலி'?!
- 'இனிமே தான் தரமான சவால்கள் எல்லாம் காத்திட்டு இருக்கு ஷ்ரேயாஸ்'- கங்குலியின் எச்சரிக்கையா? ஆலோசனையா?
- ’பொண்ணுங்க எதுக்கு கிரிக்கெட் விளையாடணும்…’- வைரல் ஆகும் கங்குலியின் பழைய வீடியோ..!
- 'அந்த ஒரு வரி... அதிகாரத்தில் இருக்கும் சிலருக்குப் பிடிக்காமல் போயிருக்கும்'- வருத்தப்படும் கவாஸ்கர்
- ‘கடந்த 4-5 வருசத்துல இந்தியா விளையாடுன மோசமான மேட்ச் அதுதான்’.. கோலியை மறுபடியும் மறைமுகமாக சாடிய கங்குலி.. கிளம்பியது புது சர்ச்சை..!