'கொஞ்ச நஞ்சமா செஞ்சீங்க'...'கிரவுண்ட்ல இல்லனாலும் அவர் கெத்து தான்'... 'ஐசிசி சொன்ன சூப்பர் செய்தி'... செம உற்சாகத்தில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் இதுவரை விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடிய அஸ்வினுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இதுவரை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 போட்டிகளில் ஒன்றில் கூட கேப்டன் கோலி வாய்ப்பு வழங்கவில்லை. அஸ்வினை ப்ளேயிங் லெவனில் சேர்க்காமல் கோலி தொடர்ந்து புறக்கணித்து வருவதோடு, ஜடேஜாவுக்கு மட்டும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி வருவது ரசிகர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ரசிகர்கள் கோலியைக் கடுமையாக வறுத்தெடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஐசிசி சிறந்த டாப் 10 பந்து வீச்சாளர்கள் மற்றும் சிறந்த டாப் 10 ஆல் ரவுண்டர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் படி முதல் இடத்தில் அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் 908 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இதற்கு அடுத்தபடியாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் 831 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் டிம் சவுத்தி 824 புள்ளிகளுடன் உள்ளனர்.

இதில் இங்கிலாந்து அணிக்கெதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். அதே போன்று இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டு இடங்கள் பின் தங்கி 7-வது இடத்தில் உள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர்களுக்கான டெஸ்ட் பட்டியலில் மேற்கிந்தியத் தீவின் ஜேசன் ஹோல்டர் 434 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்