‘விஜய் ஹசாரே போட்டியில்’... ‘அஸ்வினுக்கு எழுந்த புது சிக்கல்’... அபராதம் விதிக்கப்படுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்று வந்த அஸ்வின், விளையாட்டின்போது டிரஸ் கோடில் விதியை மீறியதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்திய அணி வீரரான அஸ்வின் அண்மையில், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக, ராஞ்சியில் நடைப்பெற்ற 3-வது டெஸ்டில் இடம் பெற்றார். அதன்பின்னர், விஜய் ஹசாரே போட்டியில் கலந்துகொண்டு, தமிழக அணிக்காக விளையாடி வந்தார். கர்நாடாகா மற்றும் தமிழக அணிகள் மோதிய இறுதிப்போட்டி, சின்னச்சாமி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் தமிழக அணியின் சார்பில் 3-வதாகக் களமிறங்கிய அஸ்வின், 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அப்போது அவர், இந்திய அணிக்காக பயன்படுத்தும் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தியுள்ளார். இது பிசிசிஐயின் விதிமுறையை மீறிய செயல் என்று கூறப்படுகிறது. பொதுவாக உள்ளூர் போட்டியில் விளையாடும்போது, பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தினால், அந்த முத்திரையை டேப்பால் மறைத்து, அதன்பிறகுதான் அதை ஆட்டத்தின்போது பயன்படுத்த வேண்டும்.
ஆனால் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை, அஸ்வின் அப்படியே பயன்படுத்தியதன் மூலம் விதிமுறையை மீறியதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து நடுவர்கள் புகார் அளித்தால், அஸ்வினுக்கு அபாரதம் விதிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வங்கதேசம் தொடர்'... 'டி20 கேப்டனான ரோகித்'... 'தோனி’யின் வருகை எப்போது?... விவரம் உள்ளே!
- ‘கிரிக்கெட்டில் இருந்து தோனி எப்போ ஓய்வு..?’ பிசிசிஐ தலைவரானதும் கங்குலி சொன்ன அதிரடி பதில்..!
- பிசிசிஐ தலைவராக சார்ஜ் எடுத்த ‘தாதா’ கங்குலி..! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..!
- ‘தல’ய பாத்து எவ்ளோ நாளாச்சு..! ‘தோனி... தோனி’.. தெறிக்கவிட்ட ரசிகர்கள்..! வைரல் வீடியோ..!
- ‘வின்னிங் விக்கெட்’.. ‘மொத போட்டியே மெர்சல் பண்ணீட்டீங்க’.. வைரல் வீடியோ..!
- ‘இத யாரும் எதிர்பாக்கல’.. பிரபல வீரரின் காலில் விழுந்த ரசிகர்..! வைரலாகும் வீடியோ..!
- ‘அதேதான்’.. ‘இததான் நாங்களும் எதிர்பாத்தோம்’ ஜடேஜா மாதிரி செஞ்ச கோலி..! வைரல் வீடியோ..!
- ‘என்னோட சூப்பர்ஸ்டார்’ ‘உலகக்கோப்பை ஜெயிச்சு கொடுத்தீங்க’.. கங்குலியின் வைரல் ட்வீட்..!
- ‘அதுக்கு அப்பறம் அவர்கிட்ட பேசினீங்களா?’.. ‘ரவி சாஸ்திரி குறித்த கேள்விக்கு தாதா கங்குலியின் வைரல் பதில்’..
- 'அஸ்வின்' சார் உங்க டீமுக்கு வருவாரா?.. என் டைம 'வேஸ்ட்' பண்ணாதீங்க.. 'கொந்தளித்த' கேப்டன்!