'கடைசி நேரத்தில் கை கழுவிய கேப்டன் கோலி'!.. அஷ்வின் திடுக்கிடும் குற்றச்சாட்டு!.. பூதாகரமான அணி தேர்வு சர்ச்சை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் தன்னை ஆசை காட்டி மோசம் செய்துவிட்டதாக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற, இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில், பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. முதல் இன்னிங்ஸில் இரு அணிகளும் சம பலத்துடன் இருந்த போதும், 2வது இன்னிங்ஸில் பும்ரா - ஷமி ஜோடி இணைந்து சேர்த்த 89 ரன்கள் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் இங்கிலாந்துக்கு எதிராக திருப்பியது. இதுவே இந்தியாவின் வெற்றிக்கும் காரணமாக அமைந்தது. 

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில், இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த சூழலில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஷ்வின் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் அஷ்வினுக்கு பதிலாக ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

2வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜா விக்கெட் எதுவும் எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார். மேலும், அவர் விக்கெட் எடுக்காமல் போனதும் அணிக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், சிராஜ், ஷமி, பும்ரா, இஷாந்த் என 4 வேகப்பந்துவீச்சாளர்களுமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் கொடுத்தனர். 

இதுவே ரவிச்சந்திரன் அஷ்வின் இருந்திருந்தால், இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டரை இன்னும் வேகமாக காலி செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், அஷ்வினை பொறுத்தமட்டில் பிட்ச் சாதகமாக இல்லையென்றாலும் கூட, பேட்ஸ்மேன்களுக்கு ரன் அடிக்க நெருக்கடி கொடுக்கக்கூடியவர். அதனால் அவர்கள் சிறுசிறு தவறுகள் செய்து விக்கெட்டை இழப்பார்கள். எனவே, அஷ்வின் இருந்திருக்க வேண்டும் என்று பலரும் ஆதங்கம் தெரிவித்தனர். 

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தான் அணியில் இடம்பெறுவதாக இருந்ததாகவும், கடைசி நேரத்தில் முடிவுகள் மாற்றப்பட்டதாகவும் அஷ்வின் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள அஸ்வின், "ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக அவர்கள், களத்தில் நல்ல வெயில் அடிக்கும் சூழல் நிலவுகிறது. விளையாடுவதற்கு தயாராக இரு அஷ்வின் எனக் கூறினார்கள். ஆனால், காலை உணவு வேளையின் போது மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது அவர்களிடம், ஏன் இதுபோன்று நடக்காத விஷயங்களில் எனக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள் என கேட்டேன்" என ஆதங்கம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியிருந்த விராட் கோலி, "நாங்கள் முதலில் 12 பேர் கொண்ட அணியை முடிவு செய்து வைத்திருந்தோம். அதில் அஷ்வினும் இருந்தார். ஆனால், பின்னர் பிட்ச்-ன் தன்மை மற்றும் வானிலை ஆகியவை கருத்தில் கொண்டு 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினோம். அணிக்கு என்ன தேவை என்பதை சிந்தித்ததாலேயே அஷ்வின் இணைக்கப்படவில்லை" எண்று தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்