VIDEO: ‘விட்டா அடிச்சிருவாரு போலயே’!.. வேகமாக ஓடி வந்து அஸ்வினை தடுத்த தினேஷ் கார்த்திக்.. போட்டியை பரபரப்பாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனிடம் அஸ்வின் சண்டைக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் 41-வது லீக் போட்டி இன்று (28.09.2021) நடைபெறுகிறது. இதில் ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், இயான் மோர்கன் (Eoin Morgan) தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் (KKR) மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்களை எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும் (24 ரன்கள்), ஸ்டீவ் ஸ்மித்தும் (39 ரன்கள்) களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி, லோக்கி பெர்குசன் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.

இதனை அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தன. அதனால் 92 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. அப்போது களமிறங்கிய அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் அதிரடி காட்ட ஆரம்பித்தார். ஆனாலும் கொல்கத்தா அணி அபாரமாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தியது.

இந்த சமயத்தில் போட்டியின் கடைசி ஓவரை கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி (Tim Southee) வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட அஸ்வின் (Ashwin), நிதிஷ் ராணாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அஸ்வினைப் பார்த்து டிம் சவுத்தி ஏதோ சொல்லி திட்டினார். உடனே பதிலுக்கு அஸ்வினும் அவரை திட்டினார்.

அப்போது வந்த கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கனும் அஸ்வினை பார்த்து ஏதோ கூறினார். இதனால் கோபமாக அஸ்வின் அவரை அடிப்பதுபோல வேகமாக அருகில் சென்றார். உடனே ஓடி வந்த தமிழக வீரரும், கொல்கத்தா அணியின் விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik), அஸ்வினை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார். எதனால் இந்த சண்டை நடந்து என தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சிறிதுநேரம் போட்டி பரபரப்பாக காணப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்