VIDEO: திடீரென அம்பயருடன் ‘கடும்’ வாக்குவாதம் செய்த அஸ்வின்.. பதறிப்போய் வேகமாக ஓடி வந்த ரஹானே.. என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அம்பயருடன் அஸ்வின் வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் எடுத்தது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியை பொறுத்தவரை டிம் சவுத்தி 5 விக்கெட்டுகளும் கெயில் ஜேமிஷன் 3 விக்கெட்டுகளும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் லதாம் மற்றும் வில் யங் களமிறங்கினர். இந்த கூட்டணியை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவு வரை இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை. இதில் டாம் லதாம் 95 ரன்களும், வில் யங் 89 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று விளையாடிய நியூசிலாந்து அணி தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வந்த வேகத்தில் வெளியேற, 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணி இழந்தது. இதில் இந்திய அணியைப் பொறுத்தவரை அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அம்பயருடன் அஸ்வின் (Ashwin) வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், அஸ்வின் பந்து வீச வரும்போது வித்தியாசமாக நான்ஸ்ட்ரைக்கர் எண்டில் உள்ள ஸ்ம்புக்கு நேராக வந்து பந்து வீசினார். இது களத்தில் இருந்த அம்பயருக்கு LBW பார்க்க மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பேட்ஸ்மேன் அடிக்கும் பந்தை தடுப்பதற்காக நான்ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி அஸ்வின் ஓடினார். இது நான்ஸ்ட்ரைக்கரை தொந்தரவு செய்யும் வகையில் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

உடனே அஸ்வினை அழைத்த அம்பயர் நிதின் மேனன் இப்படி செய்யாதீர்கள் என கூறினார். இதனால் அதிருப்தி அடைந்த அஸ்வின் அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். இப்படி பந்து வீசுவது தொடர்பாக போட்டியின் நடுவரிடம் கேட்டதாகவும், அதில் எந்தவித தவறும் இல்லை என நடுவர் கூறிவிட்டதாகவும், விதிகளின்படியே பந்து வீசுவதாகவும் அஸ்வின் முறையிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இதைப்பார்த்து வேகமாக ஓடி வந்த கேப்டன் ரஹானே, அஸ்வின் விதிகளின்படியே பந்து வீசுவதாகவும்,நான்ஸ்ட்ரைக்கர் எண்டை தொந்தரவு செய்யவில்லை என்றும் அம்பயரிடம் கூறி சமாதானம் செய்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

RAVICHANDRAN ASHWIN, INDVNZ, UMPIRE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்