‘எங்களையா வம்புக்கு இழுத்தீங்க’!.. நேரம் பார்த்து வச்சு செஞ்ச அஸ்வின்.. அதுல ‘ஹைலைட்டே’ அந்த ஒரு ட்வீட் தான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயினை விமர்சனம் செய்யும் வகையில் தமிழக வீரர் அஸ்வின் செய்த ட்விட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இன்று கப்பா மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை கப்பா மைதானத்தில் 32 வருடமாக எந்த அணியும் டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தியது இல்லை என்ற வரலாற்றை இந்திய அணி திருத்தி எழுதியுள்ளது.

இந்த தொடரில் சிட்னி மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் இந்திய வீரர்களை தனது வார்த்தைகள் மூலம் தொடர்ந்து சீண்டி வந்தார். முக்கியமாக அஸ்வினை அடிக்கடி வம்புக்கு இழுத்தார். அப்போது ‘கப்பாவிற்கு வாருங்கள், மோதி பார்க்கலாம்’ என்று அஸ்வினுக்கு ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின் சவால் விடுத்தார். உடனே, ‘இந்தியா வாங்க பெயின், அதுதான் உங்களுக்கு கடைசி போட்டியாக இருக்கும்’ என அஸ்வின் பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில் டிம் பெயினை கிண்டல் செய்யும் விதமாக அஸ்வின் ட்விட் செய்துள்ளார். அதில், ‘கப்பாவில் இருந்து எல்லோருக்கும் மாலை வணக்கம். கப்பாவில் என்னால் ஆட முடியாமல் போனதற்கு மன்னிக்கவும். கடைசி டெஸ்ட் போட்டியை கப்பாவில் நடத்தியதற்கு நன்றி. இந்த தொடரை நாங்கள் மறக்க மாட்டோம்’ என பதிவிட்டு டிம் பெயினை அதில் டேக் செய்து அஸ்வின் ட்விட் செய்துள்ளார்.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தனது முதல் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்போது இந்திய அணி இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் தோல்வி அடையும் என்று, ரிக்கி பாண்டிங், மைக்கல் வாகன் என பல ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். மேலும் விராட் கோலி இல்லாத இந்திய அணி நிச்சயம் தோல்வியை தழுவும் என பலரும் தெரிவித்து வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர்கள் கூறிய கருத்துக்களை ட்விட்டர் பதிவிட்ட அஸ்வின், ‘LHS ( not = ) RHS என்று ஷேர் செய்து, இந்த தொடரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கடந்த நான்கு வாரமாக எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி’ என மறைமுகமாக அவர்களுக்கு அஸ்வின் பதிலடி கொடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்