‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், சென்னை மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க தவறுவதாக, இந்திய வீரர் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 110 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பள்ளிகள். வணிக வாளகங்கள், திரையங்கள், விளையாட்டு போட்டிகள், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் போட்டிகள் என அனைத்தும் மூடப்பட்டும், தடை செய்யப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘கொரோனா முன்னெச்சரிக்கையை சென்னை மக்கள் தவிர்க்கிறார்கள். பொது இடங்களில் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்குமாறு அரசு கூறியதை, சென்னை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையில் நிலவும் கடுமையான வெப்பநிலையால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கும் என்று மக்கள் நினைத்து இருக்கலாம். அல்லது தங்களை எதுவும் தாக்காது என நம்பிக்கை கொண்டு இருக்கலாம்’ என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலும் சுகாதாரத்துறை அனுதினமும் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. கொரோனா வைரஸ் தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், வரும் முன் காப்பதே சிறந்தது என்று மக்கள் நினைத்து அதற்கேற்றவாறு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே மருத்துவர்களின் வேண்டுகோளாக உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கொரோனா' வைரஸ் ஒருவரது உடலில்... 'எத்தனை' நாட்கள் இருக்கும்?... 'புதிய' தகவலை வெளியிட்ட 'சீன' மருத்துவர்கள்!
- IPL 2020: 'கோப்பையை' வென்ற கையோடு... 'திருமண' பந்தத்தில் நுழைந்த இளம்வீரர்!
- லேசா தும்முனாலே 'தெறிச்சு' ஓடுறாங்களா?... கொரோனாவா இல்ல 'சாதாரண' ஜலதோசமானு எப்டி கண்டுபிடிக்கிறது?... 'செக்' பண்ணிக்கங்க!
- ‘கொரோனா’ பாதித்த ‘இளைஞர்’... மால், சினிமா, நிச்சயதார்த்தம் என ‘வெளியே’ சென்றிருந்ததால் ‘பரபரப்பு’... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்...
- 'சென்னையில் 15 நாட்களுக்கு நீர் விநியோகம் பாதிப்பு!'... உப்பு நீக்கும் ஆலை மூடப்படுவதால்... அவசர தொலைபேசி எண்களை வெளியிட்டு... சென்னை மாநகராட்சி அதிரடி!
- தந்தையின் இறுதிச்சடங்கை 'வீடியோ கால்' மூலமாக பார்த்த மகன்!... பூத உடலை ஜன்னல் வழியாக பார்த்து கதறிய சோகம்!.... கல் நெஞ்சையும் கரையவைக்கும் மகனின் பாசப் போராட்டம்!
- 'வாட்டர் பெல்' அடித்த உடனே மாணவர்களை சோப்பு போட்டு கைக்கழுவ சொல்ல வேண்டும்...! 'நோட்டிஸ் போர்டுல ஃபர்ஸ்ட் எல்லாமே போட்ருக்கணும்...' பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு...!
- 'இறந்த' உடலை தொடுவதாலோ, எரியூட்டுவதாலோ... 'கொரோனா' பரவுமா?... 'எய்ம்ஸ்' மருத்துவரின் புதிய 'விளக்கம்'...
- ‘ஆட்டோ ஓட்டியபோது திடீரென வந்த நெஞ்சுவலி’... 'டிரைவருக்கு நேர்ந்த சோகம்'... ‘தாம்பரம் அருகே நடந்த பரிதாபம்'!
- 'ஊழியருக்கு கொரோனா இருக்குமோனு'... 'சந்தேகமா இருக்குறதுனால’... ‘பெங்களூரில் அலுவலகத்தை’... ‘காலி செய்த இன்ஃபோசிஸ் நிறுவனம்’!