ஒரு அம்பையரையே மிரண்டு போயி ஸ்டம்ப் மைக்ல பொலம்ப உட்டுருக்கானுங்க.. இந்த சவுத் ஆப்ரிக்கா காரனுக..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேப்டவுன்: அம்பயர் மராஸ் எராஸ்மஸ் ஸ்டெம்ப் மைக்கில் புலம்பியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் தனது மூன்றாவது டெஸ்டை கேப்டவுன் நகரில் விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது பங்கேற்று வருகிறது. முதல் போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகித்தது. 2வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. தற்போது தென்ஆப்பிரிக்கா உடன் ஒன்றுக்கு ஒன்று என்ற புள்ளி கணக்கில் தொடரில் சமநிலை வைக்கிறது. இந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி என்ற பெருமையும், இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக வென்ற பெருமையும் கிடைக்கும். இதன்மூலம் இந்த டெஸ்ட் போட்டி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

 டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்ரிக்கா 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 13 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணியில் சீனியர் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இளம் வீரரான ரிஷப் பண்ட் மட்டும் தனியாளாக, அதிரடியுடன் ஆடி ரன்கள் குவித்தார். கடைசி வரை களத்தில் நின்ற அவர், 100 ரன்கள் எடுத்து அசத்தினார். 198 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 111 ரன்கள் தேவை, இந்தியா ஜெயிக்க 8 விக்கெட்டுகள் தேவை. 

போட்டியின் 21வது ஓவரில்  அஸ்வின் வீசிய பந்து எல்கரின் காலில் பட LBW முறையில் அவுட் நடுவர் எராஸ்மஸால் கொடுக்கப்பட்டது.எல்கர் இதை மேல் முறையீடு செய்ய நடுவர் அளித்த அவுட் வாபஸ் ஆனது.  இந்த அவுட் நாட் அவுட் ஆனது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. பந்து மிடில் ஸ்டம்பை அடிக்கும் என அனைவரும் அவதானித்த பொழுது நூலிழையில் பந்து ஸ்டெம்பை மிஸ் செய்தது. இதனால் கடுப்பான அஸ்வின், ராகுல், கோலி ஸ்டெம்ப் மைக்கிடம் சென்று கூறிய வார்த்தைகள் வைரலானது.

எல்கருக்கு அஷ்வின் போட்ட பந்தின் ரீப்ளேயை பலமுறை பார்த்துவிட்டு கவாஸ்கர் சொன்னது வைரலாகி வருகிறது. 'பவுன்சி பிட்ச்களோ, தென்னாப்பிரிக்க பிட்ச்களில் கூட, அந்த பந்து மிடில் ஸ்டம்பின் மேல் பட்டிருக்கும், குறைந்தபட்சம் பெயில்களை க்ளிப் செய்ய 10க்கு 9 முறை வாய்ப்புள்ளது. கோஹ்லி, அஷ்வின் மற்றும் ராகுல் ஆகியோரின் ஸ்டம்ப் மைக் ஆக்ரோஷமான குரல்களில், மிகவும் மென்மையான குரல் பலர் கவனத்தை ஈர்த்தது. இந்தியர்களின் கடும் சத்தத்துக்கு மத்தியில் இது கிட்டத்தட்ட கண்டறியப்படாமல் போனது. அந்தக் குரல் 'இதற்கு வாய்ப்பே இல்லை' என்று முணுமுணுத்தது. எல்கருக்கு அவுட் கொடுத்த மரைஸ் எராஸ்மஸ் தான் அந்த குரலுக்கு சொந்த காரர். தனது தீர்ப்பை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது இதை எராஸ்மஸ் முணுமுணுத்தார். 

 

RAVICHANDRAN ASHWIN, VIRATKOHLI, INDIAN CRICKET TEAM, INDIAVSSOUTHAFRICA, DEAN ELGER, MARAIS ERASMUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்