அஷ்வின் வீசிய பந்து .. அடித்து பறக்கவிட்ட அமைச்சர் உதயநிதி: சென்னை மாணவர்களுக்காக முன்னெடுக்கும் அசத்தல் திட்டம்.!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை பள்ளி மாணவர்களுக்கு, விளையாட்டில் ஊக்கம் அளிக்கும் விதமாக கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி கூட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்யுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் , அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு எனது நன்றிகள். அவர் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறியிருக்காது. பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க வேண்டும் என அவர் தான் முதலில் குறிப்பிட்டார். அதனால் அவருக்கு நன்றி.” என பேசினார்.
மேலும் பேசிய உதயநிதி ஸ்டாலின், “அஸ்வின் தற்போது ஐபிஎஸ் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். அவர் விக்கெட் எடுத்தாலும் கைதட்டுவோம். நன்றாக ஆடும் வீரர்கள் யாராக இருந்தாலும் தமிழக மக்கள் பாராட்டுவார்கள். அவருக்கு ஐபிஎல் போட்டி இருந்தும் நேரம் ஒதுக்கி விழாவுக்கு வந்ததற்கு நன்றி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி அளிக்க வருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்” என உதயநிதி பேசினார்.
மேலும், பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அடுத்து கலைஞரின் 100வது பிறந்தநாளையொட்டி, தமிழக ஊராட்சி கிரிக்கெட் அணிகளுக்கு 42 கோடி ரூபாய் செலவில் கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் கிட் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- CSK மேட்சை பார்க்க ஆசைப்பட்ட சிறுவர்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்..!
- VIDEO : "நான் குடிச்சதே இல்ல Sir!".. போலீஸிடம் வாதம் .. வைரல் வீடியோவின் பின்னணி என்ன? இளைஞர் EXCLUSIVE பேட்டி
- உடற்பயிற்சியின் போது நடந்த விபரீதம்.. மருத்துவமனையில் பிரிந்த உயிர்.. ஜிம் மாஸ்டருக்கு நேரந்த சோகம்..!
- "தோனியை முதல்தடவை பார்த்தப்போ.. இப்படித்தான் நெனச்சேன்".. சின்ன தல ரெய்னா சொன்ன விஷயம்.. உருகிய ரசிகர்கள்..!
- "இந்த வருஷம் தோனி ஓய்வு பெறுவாரா?".. ரோஹித் ஷர்மா கொடுத்த நச் பதில்..!
- "அவர்கிட்ட காசு இருக்காது.. பால் பாக்கெட் விற்பனை செஞ்சு தான்".. ரோஹித் ஷர்மா குறித்து உருக்கமாக பேசிய ஓஜா..!
- "புஷ்பா-ன்னா ஃபிளவருன்னு நெனச்சீங்களா".. ஜடேஜா செஞ்ச சம்பவம்.. வீடியோ..!
- ரிஷப் பண்ட் இந்த விஷயத்துல அவசரப்படக்கூடாது.. சவுரவ் கங்குலி கொடுத்த அட்வைஸ்..!
- "அந்த ஒரு இன்னிங்ஸ்".. இனிமே எனக்கு டீம் -ல வாய்ப்பில்லன்னு தெரிஞ்சு போச்சு.. நம்பிக்கை தகர்ந்தது பற்றி பேசிய தவான்!!
- விராட் கோலியை முதலில் பார்த்ததும் தப்பா புரிஞ்சுகிட்ட ஏபிடி.. பின்னர் தெரிய வந்த உண்மை.. சுவாரஸ்ய பின்னணி!!