இந்தா கிளம்பிட்டாங்க.. ஊருக்கு திரும்பிய அடுத்த ஆஸ்திரேலிய வீரர்.. முழு விபரம்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் நாடு திரும்பியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | வரும்போது நல்ல சேதியோடு வாங்க.. புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் ஒரு மாசம் லீவ்.. அரசின் அதிரடி.. எங்கப்பா..?

தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க கவாஸ்கர் பார்டர் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதல் போட்டி நாக்பூரில் வைத்து நடைபெற்றது. இதில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.

இதிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2 - 0 என்ற நிலையில் முன்னிலை பெற்று இருக்கிறது. முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது சவாலான காரியமாக இருக்கும் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல இரு போட்டிகளிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரின் பங்களிப்பு அதிகமிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஆஷ்டன் அகர் நாடு திரும்பியுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் Tony Dodemaide பேசுகையில்,"அகர் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்துள்ளார், அவர் அணியை ஆதரிப்பதில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளார். முதலிரண்டு போட்டிகளிலும் சுழற்பந்து வீச்சாளர்களில் யாரை தேர்ந்தெடுப்பது? என நீண்ட விவாதம் நடைபெற்றது. பிட்ச்-ன் சாதக பாதகங்களை பொறுத்து முடிவெடுத்திருந்தோம். இந்த சூழ்நிலையில் அகர் நாடு திரும்புகிறார். ஞாயிற்றுக்கிழமை பிளண்ட்ஸ்டோன் அரங்கில் டாஸ்மேனியாவுக்கு எதிரான மேற்கு ஆஸ்திரேலியாவின் மார்ஷ் ஒரு நாள் கோப்பை போட்டியில் விளையாடுவார்" என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

ஏற்கனவே அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்சல் ஸ்வெப்சன் ஆகியோர் சொந்த காரணங்களுக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளனர். அதேபோல, வார்னர் மற்றும் ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக நாடு திரும்பியுள்ள சூழ்நிலையில் அகரும் ஆஸ்திரலியாவிற்கு திரும்பியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "அம்மாவாக போகிறார்".. தோழியை கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீராங்கனை சாரா டெய்லரின் எமோஷனல் பதிவு.. வாழ்த்தும் லெஜெண்ட்ஸ்..!

CRICKET, ASHTON AGAR, AUSTRALIA, TEST SERIES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்