‘தாதாவுக்கு நன்றி கடன் பட்டுருக்கேன்’.. திடீரென ‘ஓய்வை’ அறிவித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அசோக் திண்டா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அசோக் திண்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் விளையாடி 12 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். மேலும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இந்த நிலையில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் திண்டா, ‘இந்தியாவுக்காக விளையாடுவதுதான் அனைவரின் லட்சியமாக இருக்கும். பெங்கால் அணிக்காக விளையாடியதால் எனக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. எனக்கு இந்த வாய்ப்பை தந்த பிசிசிஐக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெங்கால் அணிக்காக விளையாடும்போது எனக்கு வழிகாட்டியாக இருந்த மூத்த வீரர்கள் தீப் தாஸ் குப்தா, ரோஹன் கவாஸ்கர் ஆகியோருக்கு நன்றி.

நான் சவுரவ் கங்கிலிக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும். 2005-2006 ஆண்டு 16 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாட கங்குலி என்னை முதல்முதலாக அணியில் எடுத்தார். தாதாவுக்கு (கங்குலி) எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன். எனக்கு எப்போதும் அவர் உறுதுணையாக இருக்கிறார்.

என் கிரிக்கெட் பயணத்தை முடிக்கும் நேரம் இது. என்னை எப்போதும் சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பெங்கால் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என அசோக் திண்டா பேசியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்