"பும்ரா இப்போ டீம்'ல தேவையே இல்ல.. அவரு வந்தா இது தாங்க நடக்கும்.." முன்னாள் வீரரின் பரபரப்பு கருத்து
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு தொடர்களையும் அசத்தலாக வென்றுள்ள இந்திய அணி, அடுத்ததாக இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ளது.
3 டி 20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளது.
முதலாவதாக ஆரம்பமாகும் டி 20 தொடரின் முதல் போட்டி, தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இலங்கை டி 20 தொடரில் இருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
திரும்ப வந்த பும்ரா, ஜடேஜா
அதே போல, சூர்யகுமார் மற்றும் தீபக் சாஹர் ஆகியோரும் காயம் காரணமாக, டி 20 தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதிக இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம்பெறாமல் இருந்த சீனியர் வீரர்களான ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளனர். மேலும், இந்திய அணியின் துணை கேப்டனாகவும் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
வியப்பாக உள்ளது
இதனிடையே, பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளது பற்றி, இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா கருத்து தெரிவித்துள்ளார். 'பும்ரா டி 20 அணியில் மீண்டும் திரும்பியுள்ளது, எனக்கு வியப்பாக இருக்கிறது. எந்த ஒரு வீரராக இருந்தாலும், அதிகம் போட்டிகளில் களமிறங்க தான் விரும்புவார்கள்.
வாய்ப்பு வழங்க வேண்டும்
ஆனால், டி 20 தொடருக்கு பிறகு, இலங்கை அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளது. அதில் பும்ரா கவனம் செலுத்தி இருக்கலாம். அதற்காக, டி 20 தொடரில் பும்ரா ஆடியிருக்க வேண்டியதில்லை. ஏனென்றால், இந்திய அணியில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிகம் வாய்ப்புகளை நாம் வழங்கி, அவர்களின் ஆட்டத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பும்ரா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பினால், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ் ஆவேஷ் கான் ஆகிய வீரர்களில் ஒருவர், அணியில் இடத்தை இழக்க நேரிடும். இதனால், பும்ரா டி 20 அணியில் திரும்பியுள்ளது, எனக்கு அதிகம் வியப்பாக தான் உள்ளது' என ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
மும்பை பிளேயருக்கு பதிலா.. 'சிஎஸ்கே' பையனுக்கு வாய்ப்பு.. வாசிம் ஜாஃபர் கொடுத்த 'ஐடியா'
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஓகே சொன்ன கங்குலி.. நோ சொன்ன டிராவிட்.. சீனியர் வீரர் கருத்தால் சர்ச்சை.. மௌனம் கலைத்த டிராவிட்
- எழுந்து நின்று பாராட்டிய டிராவிட்.. சூரிய குமார் கொடுத்த செம்ம போஸ்.. வைரலாகும் வீடியோ..!
- இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்??.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு
- புவனேஷ்வர் செய்த தவறு.. கோபத்தில் பந்தை உதைத்து.. தீட்டித் தீர்த்த ரோஹித்.. காரணம் என்ன?
- "கொஞ்சம் கவனமா இருந்துருக்கலாம்'ல.." ஒரே நேரத்தில் கடுப்பான ரோஹித், சாஹல்.. காரணம் என்ன?
- "நீங்க எப்படிங்க அப்டி சொல்லலாம்??.." நடுவர் முடிவால் எரிச்சலான ரோஹித்.. போட்டிக்கு நடுவே பரபரப்பு
- ரோஹித் போட்ட தூண்டில்.. மேட்ச்'ல நடந்த சுவாரஸ்யம்.. "இப்படி பண்றதுக்கு செம துணிச்சல் வேணும்"
- எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி.. ஏன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக விளையாடுனார்..? கேப்டன் ரோகித் விளக்கம்..!
- "விராட் கோலிக்கு என்ன தான் ஆச்சு.. இப்டி எல்லாம் இருந்தா சரிபட்டு வராது.." விமர்சித்த ஆகாஷ் சோப்ரா
- "ஏன், உன்னால முடியாதா?.." ஷர்துல் செயலால் கடுப்பான ரோஹித்.. "ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆன கேப்டன் போல"