'அப்படி என்ன தான் அவசரம் கோலிக்கு?.. பயங்கரமா சொதப்புறாரு!.. தோல்விக்கு காரணம் 'இது' தான்!.. நெஹ்ரா ஆவேசம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி ஒரு கேப்டனாக மிகவும் அவசரப்படுகிறார், பும்ராவை அவர் சரியாக பயன்படுத்தவில்லை என்று முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மண்ணை கவ்வி உள்ளது. ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகள் நடந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்துவிட்டது. இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-0 என்று இந்தியா இழந்துள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு நிறைய விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றன. முக்கியமாக இந்திய அணியின் பவுலிங் மோசமாக சொதப்பிவிட்டது. இந்த நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு விராட் கோலியை நெஹ்ரா குற்றஞ்சாட்டி உள்ளார்.  

இது தொடர்பாக நெஹ்ரா அளித்துள்ள பேட்டியில், "விராட் கோலி ஒரு கேப்டனாக மிகவும் அவசரப்படுகிறார். கடந்த போட்டியில் அவசரமாக சில முடிவுகளை அவர் எடுத்தார். கடந்த போட்டியில் ஷமிக்கு புதிய பந்தில் இரண்டு ஓவர்களை மட்டுமே கோலி கொடுத்தார். இதை கூட கொஞ்சம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், பும்ராவிற்கும் இரண்டு ஓவர்தான் கொடுத்தார். 

புதிய பந்தில் பும்ரா இரண்டு ஓவர் மட்டுமே போட்டார். அதன்பின் சைனியை உள்ளே கொண்டு வந்தார். இதனால் சைனி கடுமையாக திணறினார். பும்ராவும் விக்கெட் எடுக்க முடியவில்லை. பும்ராவை கோலி பயன்படுத்தும் விதம் சரியில்லை. அவர் அவசரப்படுகிறார். 

பவுலிங் ஆர்டர் மாற்றும் போது கோலி அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கிறார். அவருக்கு 5 பவுலிங் ஆப்ஷன் இருக்கிறது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், களத்தில் பல விஷயங்கள் கோலியின் திட்டப்படி நடக்கவில்லை என்பது தெரிகிறது.

கோலி பேட்டிங் செய்யும் போதும் அவசரப்பட்டு ஆடுகிறார். கோலி இதற்கு முன்பே 350+ ஸ்கோர் ரன்களை சேஸ் செய்து இருக்கிறார். ஆனால், இப்போதெல்லாம் அவர் கூடுதல் பதற்றத்தோடு காணப்படுகிறார். அவர் தனது அவசரம் மற்றும் பதற்றத்தை குறைக்க வேண்டும்" என்று நெஹ்ரா கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்