VIDEO: ஏன் அவர் மட்டும் தனியா நிக்கிறாரு..? ஒரே ஒரு வீரருக்கான கேப்டன் செய்த செயல்.. மனசுல நின்னுட்டீங்க பாஸ்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆஷஸ் டெஸ்ட் தொடர் வெற்றி கொண்டாட்டத்தின் போது செய்த செயல் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 4-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

இந்த டெஸ்ட் தொடரில் மூலம் சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா (Usman Khawaja) கம்பேக் கொடுத்தார். சிட்னி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தி இருந்தார்.

இந்த நிலையில் கோப்பையை பெற்றபின் ஆஸ்திரேலிய வீரர்கள் ஷாம்பெயின் (Champagne) என்ற மது வகையை தெளித்து கொண்டாட தயாராக இருந்தனர். அப்போது தனது மதத்தின் மீதான நம்பிக்கையால் உஸ்மான் கவாஜா வீரர்களிடம் இருந்து விலகி நின்றார்.

இதை கவனித்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் (Pat Cummins), உடனே வீரர்கள் அனைவரையும் ஷாம்பெயின் பாட்டிலை கீழே வைக்குமாறு அறிவுறுத்தினார். இதனை அடுத்து கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு உஸ்மான் கவாஜாவை மேடைக்கு அழைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து ட்வீட் செய்த உஸ்மான் கவாஜா, ‘எனது வருகைக்காக வழக்கமான ஷாம்பெயின் கொண்டாட்டத்தை வீரர்கள் தவிர்த்தனர். நாங்கள் சரியான திசையில் சென்று கொண்டிருப்பதை உணர்கிறேன்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விளையாடும் முதல் இஸ்லாமிய வீரர் உஸ்மான் கவாஜா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ASHESTEST, PATCUMMINS, USMANKHAWAJA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்