VIDEO: சிங்கிள்ஸை சீண்டுறதே உங்களுக்கு வேலையா போச்சு.. ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் நடந்த ‘வைரல்’ சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ரசிகர் ஒருவர் தனது தோழிக்கு காதலை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

VIDEO: சிங்கிள்ஸை சீண்டுறதே உங்களுக்கு வேலையா போச்சு.. ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் நடந்த ‘வைரல்’ சம்பவம்..!
Advertising
>
Advertising

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி ஹப்பா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

Ashes Test: Fan proposes to girlfriend during first match at Gabba

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 425 ரன்களை குவித்தது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் இப்போட்டியின் இடையே மைதானத்தில் ரசிகர் ஒருவர் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தினார். மோதிரத்தை பரிசாக கொடுத்து காதலை அவர் கூறியதும் அவரது தோழி ஏற்றுக்கொண்டார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

AUSVENG, ASHESTEST, PROPOSES, FAN, GIRLFRIEND, LOVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்