T20 World Cup: ‘இதுதான் நான் விளையாடும் கடைசி போட்டி’!.. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ‘திடீரென’ ஓய்வை அறிவித்த வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆப்கானிஸ்தான் வீரர் அறிவித்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-ல் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் விளையாடி வருகின்றன. இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி, மூன்றிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் ஆப்கானிஸ்தான் 2 போட்டிகளில் விளையாடி 1-ல் வெற்றி பெற்று 2-வது இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து நம்பீயா, நியூஸிலாந்து, இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த சூழலில் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய (31.10.2021) போட்டியில் நான்கு அணிகள் மோதவுள்ளன. பிற்பகல் 3:30 மணிக்கு அபுதாபி மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ஆப்கானிஸ்தானும், நம்பீயாவும் மோதுகின்றன. அதேபோல் இரவு 7:30 மணியளவில் நடைபெற உள்ள போட்டியில் இந்தியாவும், நியூஸிலாந்தும் மோதவுள்ளன.

இந்த நிலையில் இன்றைய போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கான் (Asghar Afghan) அறிவித்துள்ளார். டி20 உலகக்கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள இவர், திடீரென ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கேப்டனாக ஆப்கானிஸ்தான் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் வரிசையில் தோனியின் (41 வெற்றிகள்) சாதனையை அஸ்கர் ஆப்கான் (46 வெற்றிகள்) முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

T20WORLDCUP, ASGHARAFGHAN, RETIREMENT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்