‘இதுல நானும் தோனி மாதிரிதான் இருப்பேன்’.. நச்சுனு பதிலளித்த கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அணியில் இளம் வீரர்களின் பங்களிப்பு குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்து பேசியுள்ளார்.

உலகக்கோப்பைத் தொடருக்கு பின்னர் இந்திய அணியில் சில மாற்றங்களை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ரிஷப் பந்த், தீபக் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்திய அணியில் உள்ள இளம் வீரர்கள் குறித்து விராட் கோலி டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் புகழ்ந்து பேசியுள்ளார். அதில்,‘இளம் வீரர்கள் அற்புதமாக விளையாடுகின்றனர். அவர்களது தன்னிம்பிக்கையை பார்க்கும் போது வியப்பாக உள்ளது. நாங்கள் 19-20 வயதில் இப்போது உள்ள இளம் வீரர்களில் பாதியளவு கூட இல்லை. இவர்கள் வயதுக்குமீறி முதிர்ச்சியுடன் நடந்து கொள்கின்றனர். ஐபிஎல் போன்ற கிரிக்கெட் போட்டிகள் மூலம் அவர்களது திறமை வளர்ந்துள்ளது. தவறுகளை உடனடியாக சரிசெய்து கொள்கின்றனர்’ என கோலி பேசியுள்ளார்.

மேலும் ஓய்வு அறையில் நடந்துகொள்ளும் விதம் குறித்து கோலியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு,  ‘ஓய்வு அறையில் வீரர்களை திட்டும் பழக்கம் எனக்கு இல்லை. தோனி எப்படி குல்தீப் உடன் நட்புடன் இருந்தாரோ அதேபோல்தான் நானும் இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

ICC, BCCI, VIRATKOHLI, TEAMINDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்