‘பக்கத்தில் பயிற்சியாளர் டிராவிட்’!.. பவ்வியமாக உட்கார்ந்திருந்த ‘கேப்டன்’ தவான்.. அப்போ உருக்கமாக சொன்ன ஒரு விஷயம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஷிகர் தவான், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குறித்து பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி வரும் ஜூலை மாதம் 13-ம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சமயத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தலைமையிலான இளம்வீரர்கள் கொண்ட இந்திய அணி இலங்கை தொடரில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியலை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது.

மேலும் இந்த தொடருக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே 19 வயதுக்குட்டோருக்கான இந்திய அணிக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது அவரது பயிற்சியின் கீழ் விளையாடிய பல இளம்வீரர்கள் இந்த தொடரில் இடம்பிடித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மத்தியில் இலங்கை தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும், கேப்டன் ஷிகர் தவானும் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஷிகர் தவான், ‘இது ஒரு நல்ல அணி. எங்கள் அணியில் நிறைய பாசிட்டீவ் உள்ளது. நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று எல்லோரும் நம்புகின்றனர். இந்த தொடர் எங்களுக்கு ஒரு புதிய சவால், ஆனால் அதே நேரத்தில் அனைவரும் தங்களது திறமையை வெளிப்படுத்த சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. எங்களது தனிமைப்படுத்துதல் காலம் முடிந்துவிட்டது. அதனால் எப்போது மைதானத்துக்கு செல்வோம் என வீரர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்’ என அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய தவான், ‘இந்திய அணியை கேப்டனாக வழி நடத்துவது பெருமையாக உள்ளது. அதே நேரத்தில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் பணியாற்ற உள்ளதை நினைக்கும்போது உற்சாகமாக இருக்கிறது. இவரது பயிற்சியின் கீழ் இந்தியா ஏ அணியில் ஒருமுறை விளையாடியுள்ளேன். அதேபோல் இளம்வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டனர். இந்த அணி அனுபவமும், இளமையும் கலந்த கலவையாக உள்ளது. அதனால் அனைவரும் இலங்கை தொடரை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கிறோம்’ என அவர் பேசினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்