"'மும்பை' டீம்'ல practice பண்ணிட்டு இருந்தப்போ.. 'பும்ரா' என்கிட்ட சொன்ன 'ரகசியம்' இது தான்.." 'இளம்' வீரர் பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் மோதவுள்ளனர்.

இந்த போட்டியானது, ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணியை சில தினங்களுக்கு முன் பிசிசிஐ அறிவித்திருந்தது. மொத்தமாக 20 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதல் வீரர்களாகவும் 4 பேர் தேர்வாகியுள்ளனர்.

இதில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பந்து வீச்சாளர் அர்சான் நக்வஸ்வாலா (Arzan Nagwaswalla), கூடுதல் வீரர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் தர போட்டிகளிலும், இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்றிருந்த சையது முஷ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடரிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகள் எடுத்திருந்தார். மேலும், ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வலைப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டிருந்தார்.

தனது சிறப்பான பந்து வீச்சுத் திறன் மூலம், தற்போது மிக முக்கியமான டெஸ்ட் தொடரின் கூடுதல் வீரராக இடம்பெற்றுள்ளதால், அர்சான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில், இந்திய அணியில் இடம்பிடித்தது பற்றிப் பேசிய அர்சான், 'எனது ரோல் மாடலும், எனது பந்து வீச்சின் உத்வேகமும் ஜாகீர்கான் தான். ஏனென்றால், அவரும் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பதால். இந்தியாவிற்காக அவர் சிறப்பாக பந்து வீசி அசத்தியதை பார்த்து தான் நான் வளர்ந்தேன்' என்றார்.

தொடர்ந்து, மும்பை அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவரான பும்ரா (Bumrah) பற்றிப் பேசிய அர்சான், 'பும்ரா இந்திய அணிக்காக அதிகம் ஆடியுள்ளதால், நான் அவருடன் இணைந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடியதேயில்லை. என்றாலும், மும்பை இந்தியன்ஸ் அணியில், ஒன்றாக பயிற்சி மேற்கொண்ட போது, என்னிடம் சில அறிவுரைகளை வழங்கினார்.

"உன்னால் முடிந்த வரை மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அது ஜாகீர் கானாக இருந்தாலும், ஷேன் பாண்டாக இருந்தாலும், மற்ற யாராக இருந்தாலும் சரி. அதிலிருந்து கற்றுக் கொண்ட பிறகு, நீ என்ன செய்ய தீர்மானிக்கிறாய் என்பதை நீயே முடிவு செய்து கொள்ள வேண்டும்" என்றும் பும்ரா என்னை அறிவுறுத்தினார்' என அர்சான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்