இந்திய அணியின் ‘ஸ்டார் ப்ளேயருக்கு’ எதிராக ‘கைது வாரண்ட்’.. ‘அதிர்ச்சியில் ரசிகர்கள்’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு எதிராக அலிப்பூர் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின்  வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது கடந்த ஆண்டு அவருடைய மனைவி ஹசின் ஜகான் ஃபேஸ்புக்கில் பகீர் குற்றச்சாட்டை வைத்தார். அதில் அவர், ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுடன் நேரம் செலவளிப்பது பற்றிக் கேட்டால் தன்னை அடிப்பதாகவும் கூறியிருந்தார். அதனுடன் அவர் ஷமி சில பெண்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், அவர் அனுப்பிய சில மெசேஜ்களையும் சேர்த்து பதிவிட்டிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஹசின் ஜகான், ஷமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் அவர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து ஷமி இந்திய அணியில் விளையாடுவது சிக்கலாகி அவருடைய ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிசிசிஐ விசாரணைக்கு பின்னரே அவர் மீண்டும் அணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இதைத்தொடர்ந்து ஹசின் ஜகான் ஷமி மீதும் , அவருடைய சகோதரர் மீதும் கொல்கத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஷமி மீது வரதட்சனை கொடுமை மற்றும் பாலியல் தொந்தரவு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அலிப்பூர் நீதிமன்றம் அந்த வழக்கில் ஷமி மற்றும் அவருடைய சகோதரருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள் இருவரும் 15 நாட்களுக்குள் சரணடையுமாறும் கூறியுள்ளது.

TEAMINDIA, MOHAMMEDSHAMI, ARRESTWARRANT, WIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்