'கோமாவிலிருந்து வந்துட்டாரேன்னு சந்தோச பட்டோமே'... 'சுக்கு நூறாய் நொறுங்கிய நம்பிக்கை'... தமிழக முன்னாள் வீரருக்கு நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கோமாவிலிருந்து மீண்டுவிட்டாரே என்ற மகிழ்ச்சி சிறிதும் இல்லாமல் போய்விட்டது.

டேபிள் டென்னிஸ் விளையாட்டில் 80களின் கதாநாயகனாக ஜொலித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த சந்திரசேகரன். இவர் மூன்று முறை தேசிய சேம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். அதோடு சர்வதேச வீரர்களையும் உருவாக்கியுள்ளார். பத்ம ஸ்ரீ சரத் கமல், அர்ஜுனா விருது வென்ற சத்தியன் ஆகியோர் இவரிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.

இந்நிலையில் சந்திரசேகரனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 16 வருடம் டேபிள் டென்னிஸ் விளையாட்டு கற்றுக்கொடுத்த சந்திர சேகரன் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்தது.

அவர் கோமாவில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது கொரோனாவிற்கு பலியாகி உள்ளது, ஒட்டுமொத்த இந்திய டேபிள் டென்னிஸ் உலகத்திற்கும் சோகமான நாள் என அர்ஜூனா விருது வென்ற டேபிள் டென்னிஸ் வீரர் சத்தியன் ஞானசேகரன் வேதனை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே  கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பொதுமக்கள் முதல் விளையாட்டு, திரை பிரபலங்கள் எனப் பலரது உயிரைத் தொடர்ந்து காவு வாங்கி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்