‘சின்ன வயசுல இருந்தே தீவிர ரசிகன்’!.. ஐபிஎல் ஏலத்துக்கு பின் ‘அர்ஜுன் டெண்டுல்கர்’ சொன்ன விஷயம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தன் மீது நம்பிக்கை வைத்து ஏலத்தில் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நன்றி என அர்ஜூன் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 14-வது சீசனுக்கான மினி ஏலம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியும் வீரர்களை போட்டிப்போட்டு எடுத்தன. இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் முதல் முறையாக இடம்பிடித்திருந்தார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன்  டெண்டுல்கரின் அடிப்படை விலை ரூ.20 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றைய ஏலத்தில் அவரது பெயர் வாசிக்கப்பட்ட போது மும்பை அணி ரூ.20 லட்சத்திற்கு கேட்டது. அப்போது வேறு எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இதனை அடுத்து அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தேர்வானார்.

இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்தது குறித்து பேசிய அர்ஜுன் டெண்டுல்கர், ‘நான் சின்ன வயதில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் அணியின் தீவிர ரசிகன். என் மீது நம்பிக்கை வைத்த பயிற்சியாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய ஆர்வமாக இருக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார். இதில், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்