ரோகித் ஷர்மால்லாம் இல்ல! மும்பை இந்தியன்ஸ் டீம்ல எனக்கு இந்த வீரரை மட்டும் தான் பிடிக்கும்.. போட்டுடைத்த சச்சின் மகன்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை: தனக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் இவரை தான் பிடிக்கும் என சச்சின் மகன் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

சச்சின் மகன் அர்ஜூன் இடது கை வேகப்பந்து வீச்சாளராக மும்பை அணியில் உள்ளார். அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 2021 ஐபிஎல் ஏலத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் உரிமையாளரால் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் இதுவரை ஐபிஎல்லில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியால் அர்ஜுன் டெண்டுல்கர் 20 லட்ச ரூபாய்க்கு வாங்கப்பட்டார்.

சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் சில கேள்விகளுக்கு பதிலளித்தார். மேலும், அவருக்கு பிடித்த மும்பை இந்தியன்ஸ் (MI) வீரர் யார் என்று கேட்டதற்கு, ஜஸ்பிரித் பும்ராவை தான் மிகவும் பிடித்த வீரர் என அர்ஜூன் பதிலளித்தார். ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி 2022 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக ஜஸ்பிரித் பும்ராவை தக்க வைத்துக் கொண்டது. பும்ராவுக்கு சம்பளமாக 12 கோடி ரூபாய் கொடுக்கப்படுகிறது.

பும்ரா 8 ஆண்டுகளாக மும்பை அணியின் முக்கிய ஆணிவேராக இருந்து வருகிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் ஆன பும்ரா 106 ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸை (MI) பிரதிநிதித்துவப்படுத்தி ஆடியுள்ளார் மேலும் 18.63 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் பும்ரா சராசரி 23.05 மட்டுமே. ஐபிஎல் தவிர, பும்ரா இந்திய அணியின் முக்கியத் தூண்களில் ஒருவர். 28 வயதான பும்ரா இந்திய கிரிக்கெட் அணிக்காக 27 டெஸ்ட், 70 ஒருநாள் மற்றும் 55 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அவர் ODI  & டெஸ்ட்-ல் 113 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும்,  டி20 கிரிக்கெட்டிலும் பும்ரா 66 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இப்போ 500 கோடிக்கு அதிபதியா இருக்க வேண்டியவங்க! GH-ல கேட்க ஆள் இல்லாம இருந்துருக்காங்க...

ஜஸ்பிரித் பும்ரா கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் போது  27.40 சராசரியில் மொத்தம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிப்ரவரி 6, 2022 அன்று தொடங்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தியாவின் 50/20 ஓவர்கள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தத் தொடர் 3 ODIகள் மற்றும் 3 T20I போட்டிகளைக் கொண்டிருக்கும்.

ராகுலை வைத்து இந்திய அணி பெருசா போட்ட பிளான்??.. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே கிரிக்கெட் பிரபலம்

ARJUN TENDULKAR, MUMBAI, MUMBAI INDIANS, JASPRIT BUMRAH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்