‘இப்படி அனுப்பி இந்தியா நம்மள அவமானப்படுத்திருச்சு’!.. முன்னாள் இலங்கை வீரர் சொன்ன பதில்.. கொதித்த இந்திய ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய ஏ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வருவது அவமானம் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் காட்டமாக பேசியுள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ஏ அணி, 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. தற்போது விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

அதனால் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களைக் கொண்ட இந்திய ஏ அணி இலங்கை தொடரில் விளையாட உள்ளது. இதற்கான வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. தற்போது இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள், அங்கு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரணதுங்கா காட்டமாக பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘இரண்டாம் தர இந்திய அணி இங்கு விளையாட வந்திருப்பது நமக்கு மிகப்பெரிய அவமானம். பணத்துக்காகவும், தொலைக்காட்சி மார்க்கெட்டிங் தேவைக்காகவும் இப்படிப்பட்ட தொடரை ஒப்புக்கொண்டதற்காக நமது கிரிக்கெட் நிர்வாகத்தையே சாடுவேன். சிறந்த அணியை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு, பலவீனமான அணியை இங்கு அனுப்பியுள்ளனர்’ என அர்ஜூனா ரணதுங்கா தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பலவீனமான அணி என அர்ஜுனா ரணதுங்கா கூறியதற்காக இந்திய ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், ப்ரித்வி ஷா, தீபக் சாஹர், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட இளம் வீரர்கள் ஐபிஎல் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணி குறித்த அர்ஜுனா ரணதுங்காவின் பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு இவர் தலைமையிலான இலங்கை அணி ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்