அவுட் ஆனதால் விரக்தி.. மோதலில் ஈடுபட்ட கே எல் ராகுல்.. மைதானத்தில் நிலவிய பரபரப்பு
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதென்னாப்பிரிக்கா : மைதானத்தில் வைத்து இந்திய கேப்டன் கே எல் ராகுல், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களும் எடுத்திருந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர், 7 விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.
ஃபார்முக்கு வந்த புஜாரா, ரஹானே
இதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி ஆடி வருகிறது. தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறிய நிலையில், கடும் விமர்சனத்துக்குள் ஆன சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
வாய்த் தகராறு
இருவரும் அரை சதமடித்து அசத்திய நிலையில், புஜாரா 53 ரன்களிலும், ரஹானே 58 ரன்களிலும் அவுட்டாகினர். இவர்களின் விக்கெட்டிற்கு பிறகு, சிறிய இடைவெளியில் இந்திய அணியின் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, இந்திய கேப்டன் கே எல் ராகுல், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் வாய்த் தகராறில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை விக்கெட்
இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை, கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடங்கினர். இதில், மார்கோ ஜென்சன் ஓவரில், ஸ்லிப்பில் நின்ற மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ராகுல் அவுட்டானார். முன்னதாக, பந்து மார்க்ரமின் கைக்குள் செல்வதற்கு முன்பாக, தரையில் பட்டது போலவும் தோன்றியது.
இதனால், முடிவு மூன்றாம் நடுவருக்கு மாற்றப்பட்டது. இருந்த போதும், தெளிவான முடிவைப் பெற முடியவில்லை. ஆனால், ராகுல் அவுட் என இறுதியில் அறிவிக்கப்பட்டது. இதனால், ராகுலின் விக்கெட்டை தென்னாப்பிரிக்க வீரர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
விரக்தியில் ராகுல்
அவுட் என அறிவிக்கப்பட்டதால், விரக்தியில் நடந்து சென்ற கே எல் ராகுல், தென்னாப்பிரிக்க வீரர்களிடம் ஏதோ கோபத்தில் பேசியுள்ளார். பதிலுக்கு அந்த அணியைச் சேர்ந்த வீரர்களும், ராகுலிடம் ஏதோ தெரிவித்துள்ளனர். சில வினாடிகள் நடந்த இந்த வாய்த் தகராறால், மைதானத்தில் பரபரப்பு நிலவியது.
தொடரும் தவறுகள்
முன்னதாக, தென்னாப்பிரிக்க வீரர் வெண்டர் டுசன், ஷர்துல் தாக்கூர் பந்து வீச்சில் ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பந்து தரையில் பட்டு, பின்னர் ரிஷப் பண்ட்டின் கைக்குள் செல்வது போல இருந்தது. ஆனால், நடுவர் அவுட் என அறிவித்ததும் அப்பீல் கூட செய்யாமல், வெண்டர் டுசன் கிளம்பி விட்டார்.
ரீப்ளேயில் அவுட்டில்லை என தெரிந்ததும், தென்னாப்பிரிக்க டீன் எல்கர், போட்டி நடுவர்களிடம் இதுகுறித்து முறையிட்டார். இந்த சம்பவமும், அதிகம் பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மைதானத்தில் பும்ரா செய்த மாஸ் சம்பவம்.. அதுக்கு அவங்க மனைவி குடுத்த ரியாக்ஷன் தான் ஹைலைட்டே
- இதுக்கு மேலயும் தப்பு பண்ணாதீங்க டிராவிட்.. சீக்கிரம் முடிவு எடுங்க.. கறாராக சொன்ன தினேஷ் கார்த்திக்
- இந்தியா டீம்'க்கு வந்த சோதனை.. "அட போங்க பாஸ்.." உச்சகட்ட விரக்தியில் ரசிகர்கள்
- சிறு வயது நட்பு.. ராஞ்சி முதல் இந்தியா டீம் வரை.. நெகிழ வைத்த கே எல் ராகுல் - மயங்க் அகர்வால்
- அபார வெற்றி.. செஞ்சுரியன் மைதானத்தில் வரலாறு படைத்த இந்தியா
- போட்டியை நிறுத்திய அஸ்வின்.. நடுவரை ரவுண்டு கட்டிய இந்திய வீரர்கள்.. என்ன நடந்தது?
- இவரு ஏன் இப்படி பண்ணிட்டு இருக்காரு?.. அப்செட் ஆன சுனில் கவாஸ்கர்.. நெருக்கடியில் கோலி?
- தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ரஹானேவுக்கு பதில் இவரா?- கே.எல்.ராகுல் ஓப்பன் டாக்
- "ஏதாவது புதுசா பண்ணிட்டே இருக்காப்ல.." 'இளம்' வீரரை புகழ்ந்து தள்ளிய 'சச்சின்'.. வேற லெவல் 'கவுரவம்'..
- "பாவம்யா 'கோலி'!.. 'அந்த' ஒரு விஷயத்துக்காக எவ்ளோ 'ஃபீல்' பண்ணி இருப்பாரு தெரியுமா?".. விடாது தொடரும் 'சர்ச்சை'!!