3-வது முறையாக உலகக்கோப்பையை வென்றது அர்ஜென்டினா.. உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..! FIFA2022
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பையை மூன்றாவது முறையாக வென்று சாதனை படைத்திருக்கிறது அர்ஜென்டினா அணி. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து. சாதாரண போட்டிகளுக்கே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அப்படியிருக்க உலகக்கோப்பை என்றால் சொல்லவா வேண்டும்? மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக்கோப்பை நடைபெற்ற நிலையில், தற்போது கத்தாரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று இறுதிப்போட்டி நடைபெறுவதால் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
நடப்பு உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் பிரான்ஸ், மொரோக்கோ, அர்ஜென்டினா மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் நுழைந்தன. இதில் வெற்றிபெற்ற பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா இறுதிப் போட்டியில் விளையாடின. கத்தாரில் உள்ள லுஸைல் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது.
அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியானல் மெஸ்ஸி இந்த உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் அர்ஜென்டினா வெல்லுமா என அந்த அணி ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அர்ஜென்டினா ஆறாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்கேற்கிறது. 1978 மற்றும் 1986ல் வெற்றி பெற்ற அவர்கள் 1930, 1990 மற்றும் 2014ல் தோல்வியடைந்தனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இருக்கிறது. பிரான்ஸ் வீரர் பாக்சில் அர்ஜென்டினா வீரரை தள்ளிவிட்டதால் பெனால்டி தரப்பட்டது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி கோலாக மாற்றினார். ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் அர்ஜென்டின வீரர் டி மரியா 2வது கோல் அடித்தார். இந்த நிலையில், அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 81 வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி தனது முதல் கோலை அடித்தது. அந்த அணியின் கேப்டன் எம்பாப்பே அடித்த முதல் கோல் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு உருவானது. அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த கோலை எம்பாப்பே அடித்து அர்ஜென்டினா ரசிகர்களை உறைய வைத்தார். இதனால் 2-2 என போட்டி சமன் ஆனது. பின்னர் ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால் இரு அணிகளுமே ஒவ்வொரு கோல் அடிக்க 3-3 என மீண்டும் போட்டி சமன் ஆனது. இதனையடுத்து பெனால்டி ஷூட்அவுட் முறையில் 4- 2 என அர்ஜென்டினா வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருக்கிறது அர்ஜென்டினா. இதனால் அந்த அணி ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரொனால்டோ - மெஸ்ஸி யாரு பெஸ்ட்.?.. ரசிகரின் கேள்விக்கு ஷாருக் கான் கொடுத்த 'நச்' ரிப்ளை.. வைரல் ட்வீட்..!
- தம்பி மைக்கை ஐஸ்க்ரீம்-னு நெனச்சுட்டான்😂.. மொரோக்கோ வீரர் பேசும்போது மகன் செஞ்ச கியூட்டான வேலை.. வைரல் வீடியோ..!
- "அந்த சம்பவம் எங்களை ரொம்ப பாதிச்சிடுச்சு".. மனம் திறந்த அர்ஜென்டினா கோச்.. வெற்றிக்கு பின்னால் இருந்த மறக்க முடியாத வலி..!
- 10 வருசத்துக்கு முன்னாடி மெஸ்ஸி கூட ஃபோட்டோ.. இன்னைக்கி அவரு கூடயே உலக கோப்பையில் கோல்.. திரும்பி பாக்க வெச்ச இளம் வீரர்!!
- விண்வெளியிலிருந்து வந்த FIFA உலகக்கோப்பை கால்பந்து.. அடேங்கப்பா இது புதுசா இருக்கே.. ஆச்சர்ய பின்னணி..!
- "இதுதான் என்னோட கடைசி போட்டி"... ஓய்வை அறிவித்த மெஸ்ஸி.. அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள்..!
- FIFA WORLD CUP 2022 : அர்ஜென்டினா தோத்ததுக்கு கலங்கிய கேரள சிறுவன்.. கனவை நிறைவேற்றி இன்ப அதிர்ச்சி கொடுத்த டிராவல் ஏஜென்சி..
- போராடி தோற்ற பிரேசில்.. நெதர்லாந்துக்கு செக் வைத்த அர்ஜென்டினா.. காலிறுதி போட்டிகள் முடிவில் முன்னேறிய அணிகள் யார்?
- FIFA World Cup 2022 : அர்ஜென்டினா தோற்றதால் கண்ணீர் விட்ட கேரள சிறுவன்.. வீடு தேடி வந்த அசத்தல் ஜாக்பாட்!!
- இந்திய கொடியை அணிந்து கொண்டு.. கால்பந்து போட்டி பாக்க வந்த அர்ஜென்டினா பெண்.. காரணம் தெரிஞ்சு கொண்டாடும் இந்தியர்கள்!!