"உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்".. சிறப்பாக ஆடிய அர்ஜென்டினா கோல் கீப்பருக்கு கிடைத்த பெயர்.. சர்ச்சை பின்னணி!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கத்தாரில் வைத்து சமீபத்தில் நடந்து முடிந்த கால்பந்து உலக  தொடரை மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி கைப்பற்றி அசத்தி இருந்தது.

Advertising
>
Advertising

இறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதி இருந்த சூழலில், ஒவ்வொரு நிமிடமும் விறுவிறுப்பாக செல்ல கடைசியில் பெனால்டி ஷூட்அவுட் வாய்ப்பை அர்ஜென்டினா அணி 4 - 2 என்ற கணக்கில் கைப்பற்றி 3 ஆவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.

கால்பந்து உலகின் தலைசிறந்த வீரராக கருத்தப்படும் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி உலக கோப்பையை வென்றதையும் ரசிகர்கள் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு காரணம், கால்பந்து போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைத்த போதும் உலக கோப்பையை மெஸ்ஸியால் தொடவே முடியவில்லை. ஆனால், அவரது கடைசி உலக கோப்பை கால்பந்து தொடர் என கருதப்பட்ட இந்த முறை, கோல்கள் அடித்து அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்லவும் உதவி செய்துள்ளார். அர்ஜென்டினா அணி வெற்றியை உலகெங்கிலுமுள்ள கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் வீரர்கள் அர்ஜென்டினாவிற்கு திரும்பி இருந்த போதும் பிரம்மாண்ட வரவேற்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அர்ஜென்டினா அணியின் கோல் கீப்பர் குறித்து முன்னாள் பிரான்ஸ் வீரர் தெரிவித்துள்ள கருத்து, அதிக பரபரப்பை கால்பந்து வட்டாரத்தில் உருவாக்கி உள்ளது.

உலக கோப்பை இறுதி.போட்டியில், அர்ஜென்டினா அணி வெற்றி பெற முக்கிய காரணமாகவும் இருந்தவர் அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ். பிரான்ஸ் அணியின் சில கோல் வாய்ப்புகளை அசத்தலாக தடுத்து நிறுத்திய மார்டினஸ், பெனால்டி வாய்ப்பின் போதும் இரண்டு கோல்களை தடுத்திருந்தார். மேலும் உலக கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடியதற்காக அவருக்கு சிறந்த கோல் கீப்பருக்கான தங்க க்ளவ் விருதும் வென்றிருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக அர்ஜென்டினா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், அந்நாட்டின் தலைநகரில் திறந்த வெளி பேருந்து ஒன்றில் வீரர்கள் உலா வந்தனர். அந்த சமயத்தில் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பேவின் முகம் பதித்த பொம்மை ஒன்றை கையில் வைத்திருந்தார். இது பெரிய அளவில் சர்ச்சையை உண்டு பண்ணி உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு கால்பந்து உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் வீரர் அடில் ராமி, மார்டினஸை விமர்சித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள பதிவின் படி, "உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் மனிதர் மார்டினஸ். கால்பந்து உலகின் மிகப்பெரிய அவலம் அவர். எம்பாப்பே அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதனால் தான், உலக கோப்பை வெற்றியை காட்டிலும் நமது அசாத்திய வீரருக்கு எதிராக கிடைத்த வெற்றியை இப்படி கொண்டாடி வருகிறார்கள்" என மார்டினஸ் செயலை விமர்சனம் செய்துள்ளார்.

ARGENTINA, FIFA, MARTINEZ, MBAPPE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்