‘உலகக்கோப்பையில அந்த கடைசி 30 நிமிஷத்த மட்டும் தவிர்த்திட்டு பார்த்தா’!.. மனம் திறந்த கேப்டன் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் கடைசி 30 நிமிடத்தை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்திய அணி சிறப்பாகவே விளையாடிருப்பது தெரியவரும் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் ஷர்மாவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. கடைசி ஒருநாள் போட்டியில் 85 ரன்களை குவித்த கேப்டன் விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்க்கப்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விராட் கோலி, ‘2019-ம் ஆண்டு இந்திய அணிக்கு மிக சிறப்பான ஆண்டாக அமைந்தது. உலகக்கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணியுடனான அரையிறுதிப் போட்டியின் கடைசி 30 நிமிடங்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், நாம் சிறப்பாகவே விளையாடி உள்ளோம். இப்போதும் உலகக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் எங்களிடம் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை இப்போது மேற்கொண்டு வருகிறோம்’ என பேசினார்.

மேலும் பேசிய அவர், ‘இப்போது இருக்கும் இந்திய அணியின் பலம் வேகப்பந்து வீச்சுதான். இந்த பந்துவீச்சை வைத்துக்கொண்டு எந்த போட்டியையும் வெற்றி பெறலாம். வெளிநாட்டில் நடைபெற்ற தொடர்களை இந்திய அணி வென்றதே அதற்கு சான்று’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்