எல்லா டீம் 'கேப்டன்'களும்... விரும்புற ஒரே பவுலர் 'இவர்' தான்... அவரு சும்மா வேற மாதிரி"... புகழந்து தள்ளிய 'சுனில்' கவாஸ்கர்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், பல இந்திய இளம் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அதே போல, மற்ற அணியின் பந்து வீச்சாளர்களும் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராஷித் கான் குறித்து பேசியுள்ளார். 

'எந்த வடிவிலான கிரிக்கெட் போட்டி கேப்டன்களிடமும் எந்த ஒரு பவுலர் உங்கள் அணியில் இடம்பெற வேண்டும் என கேட்டால் நிச்சயம் அனைவரும் ராஷித் கானை மட்டும் தான் தேர்வு செய்வார்கள். நான் அடித்து சொல்கிறேன், நிச்சயம் அதைத் தான் சொல்வார்கள்' என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும், 'முக்கிய விக்கெட்டுகளை எடுக்கும் ராஷித் கான், இன்னொரு புறம் அதிகம் டாட் பால்களையும் வீசுகிறார். பொதுவாக லெக் ஸ்பின்னர்கள் அதிகம் ஷார்ட் பால் மற்றும் ஃபுல் டாஸ் பந்துகளை வீசுவார்கள். ஆனால், அதனைக் கூட ராஷித் கான் அரிதாகத் தான் வீசுகிறார். அதனால் தான், பல பேட்ஸ்மேன்கள் அவரது பந்து வீச்சை எதிர்கொள்வதை கடினமாக உணர்கிறார்கள். இந்த மாதிரி ஒரு பந்து வீச்சை தான் நிச்சயமாக அனைத்து கேப்டன்களும் எதிர்பார்ப்பார்கள்' என ராஷித் கானுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் அணிக்காக ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி வீரர் ராஷித் கான் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்