"இது தந்தையின் தாலாட்டு".. ட்ரெக்கிங்கில் மகளுடன் நீரில் விளையாடிய விராட்.. வைரலாகும் அனுஷ்கா Post!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. நம்பர் 1 பேட்ஸ்மேனாக விளங்கி வந்த விராட் கோலி, கடந்த ஆண்டு ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு வரை அதிக விமர்சனங்களை சந்தித்திருந்தார்.

                                                                                           Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

இதனைத் தொடர்ந்து, ஆசிய கோப்பை, டி 20 உலக கோப்பை என அடுத்தடுத்து தொடர்களில் தனது பேட்டிங் திறன் மூலம் கிங் என்பதை நிரூபித்த விராட் கோலி, அடுத்தடுத்து சதங்களையும் அடித்து அசத்தி இருந்தார்.

இதனிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் விராட் கோலி இடம் பிடித்திருந்தார். இந்த தொடரில், இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது. இதற்கடுத்து நடந்த டி 20 தொடரில் ஓய்வில் இருந்த விராட், அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெறவுள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆட உள்ளார்.

இதனிடையே, தற்போது ஓய்வில் உள்ள விராட் கோலி, தனது மனைவி மற்றும் நடிகையான அனுஷ்கா ஷர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோருடன் ரிஷிகேஷ் சென்றிருந்தார். இந்த ஆன்மீக பயணத்தில் மலை கடந்து ட்ரெக்கிங் பயணத்தையும் அவர்கள் மேற்கொண்டிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்களையும் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.

Images are subject to © copyright to their respective owners

அந்த வகையில், அவர்கள் மலை கடந்து நடந்து செல்லும் புகைப்படங்களை அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் மகள் வாமிகாவுடன் விராட் கோலி தண்ணீரில் ஆடும் விளையாடுவது போன்ற ஒரு புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது அதிக கவனம் பெற்று வருவதுடன் நெட்டிசன்கள் லைக்குகளையும் அள்ளி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners

முன்னதாக, ரிஷிகேஷ் பகுதியில் இருந்த ஆசிரமம் ஒன்றில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மா ஆகியோர் சென்றிருந்த புகைப்படங்களும் அதிகம் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

VIRAT KOHLI, ANUSHKA SHARMA, VAMIKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்