'இளம்' வீரருக்கு 'அஸ்வின்' கொடுத்த 'அட்வைஸ்'.. "அய்யய்யோ, என்னால பண்ண முடியாது'ங்க.. அப்புறம் ஊரே என்ன வில்லன் மாதிரி பார்க்கும்.." பயத்தில் உளறிய 'வீரர்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த 14 ஆண்டுகளாக, ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டிக்கான ரசிகர்கள், இந்தியாவில் மட்டுமில்லாது, பல உலக நாடுகளிலும் அதிகமாக உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில், பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால், அதே வேளையில் அதிக சர்ச்சைகளும் அரங்கேறாமல் போவதில்லை. அதிலும், குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு, ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில், பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் அவுட் செய்திருந்தது கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.


பந்து வீச்சாளர் பந்து கையில் இருந்து ரிலீஸ் செய்வதற்குள், நான் ஸ்ட்ரைக் பகுதியில் இருக்கும் பேட்ஸ்மேன், கிரீஸை விட்டு வெளியேறக் கூடாது. அப்படி அவர் செய்தால், மன்கட் முறையில், அவரை பந்து வீச்சாளர் அவுட் செய்யலாம்.

இதற்கு கிரிக்கெட் விதிமுறைகள் இருந்தாலும், அன்று அஸ்வின் ஏதோ தவறு செய்தது போலவே, அனைவரும் கருதினர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அஸ்வின் செய்தது சரி தான் என பலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், அதே ஐபிஎல் சீசனின் போது, மன்கட் குறித்து நடந்த மற்றொரு நிகழ்வு ஒன்றை, சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) தற்போது பகிர்ந்துள்ளார்.

'மன்கட் முறையில் அவுட் செய்வது பேட்ஸ்மனுக்கு இடையூறாக தெரிந்தால், அவர்கள் கிரீஸுக்குள்ளே நிற்க வேண்டும். அதனை விட்டு விட்டு, நான் ஸ்ட்ரைக் பேட்ஸ்மேனை பந்து வீச்சாளர் அவுட் செய்யக் கூடாது என்பது தவறு. ஒரு விளையாட்டு மிகவும் போட்டித் தன்மை உடையதாக மாறும் போது, பந்து வீச்சாளரை நாம் கட்டுப்படுத்தக் கூடாது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக பட்லரை நான் அப்படி அவுட் செய்த அடுத்த போட்டியில், மும்பை அணிக்கு எதிராக நாங்கள் ஆடினோம்.

அப்போது மும்பை அணியின் வெற்றிக்கு ஒரு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஒரு விக்கெட் மட்டும் மும்பை வசம் இருக்க, பவுலர் அன்கித் ராஜ்புட் (Ankit Rajpoot) அருகே சென்றேன். அவரிடம், "நீங்கள் பந்து வீசுவதற்கு முன்னால், நான் ஸ்ட்ரைக்கர் வெளியே சென்றால், அவரை அவுட் செய்து விடுங்கள்" என கூறினேன். இதற்கு பயந்து கொண்டே பதிலளித்த அன்கித், "நிச்சயம் அதனை நான் செய்ய மாட்டேன்" என என்னிடம் கூறினார்.

அன்கித் பந்து வீச வந்த போது உறைந்து நின்றார். தொடர்ந்து, என்னிடம் பேசிய அவர், "நான் அப்படி அவுட் செய்தால், அது சர்ச்சையை உருவாக்கும். அதன் பிறகு, நான் வில்லனாக பார்க்கப்படுவேன்" என்றார். பிறகு அவரிடம் நான் சொன்னேன், "நீங்கள் இங்கே செய்வது எல்லாம் சரியானது தான். நான் ஸ்ட்ரைக்கர் செய்யும் செயல் தான் தவறானது" என மன்கட் அவுட் முறை, ஒரு பவுலரை எந்த அளவுக்கு தவறாக கருத வைத்தது என்பது பற்றி அஸ்வின் விளக்கமளித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்