இந்திய அணிக்கு ‘புதிய’ கோச் இவரா..? ஐயோ..! ஏற்கனவே கோலிக்கும், இவருக்கும் சின்ன ‘உரசல்’ ஏற்பட்டிருக்கே.. தீவிர ஆலோசனையில் பிசிசிஐ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிதாக தேர்வு செய்யவுள்ள பயிற்சியாளர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் வரும் டி20 உலகக்கோப்பை தொடருடன் முடிவடைகிறது. அதனால் அடுத்த பயிற்சியாளராக யாரை நியமிப்பது என பிசிசிஐ தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேவை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே செயல்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சாம்பின்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியை தழுவியது. அதனால் தனது பதவியை அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார். இதனை அடுத்து ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட உரசல் காரணமாகதான் அனில் கும்ப்ளே பதவி விலகியாக கூறப்பட்டது. வீரர்களை சுந்தந்திரமாக இருக்க விடுவதில்லை, பள்ளிக் குழந்தைகள் போல் நடத்துகிறார் என அனில் கும்ப்ளே மீது கோலி குற்றம் சாட்டியதாக சொல்லப்பட்டது. இதற்கு அப்போது, ‘உங்களை ஜாலியாக இருக்கவிட்டால் தான் பயிற்சியாளராக நீடிக்க முடியுமோ?’ என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அனில் கும்ப்ளே மீண்டும் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்தனேவையும் பிசிசிஐ அணுகியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஜெயவர்தனே பயிற்சியாளராக மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்