'யப்பா, கிரிக்கெட் விளையாட சொன்னா...' 'ஹாக்கி விளையாடிட்டு இருக்கீங்க...' சிஸ்கே அணியை 'கிண்டல்' செய்த முன்னாள் வீரர்...! மேட்ச் 'முடிஞ்ச' உடனே வச்சு செய்த நெட்டிசன்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய (19-09-2021) போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட் செய்து 25 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆட்டம் ஆரம்பித்த உடன் அதன் போக்கை கண்டு சிஸ்கே ரசிகர்கள் வேதனையடைந்தனர்.

முதல் மூன்று ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது டுபிளெசிஸ், மொயின் அலி டக் அவுட் ஆகி வெளியேறினர். ராயுடு காயமடைந்து 0 ரன்களில் வெளியேறினார், சுரேஷ் ரெய்னா போல்ட்டிடம் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து 7 ரன்களுக்கு மூன்று விக்கெட் ஆகிய நிலையில் ராயுடுவும் வெளியேற நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்தது.

அதற்கு அடுத்ததாக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 88 ரன்கள் அடித்து மும்பை இந்தியன்சை அடித்து துவைத்தார், ஜடேஜா 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். டிவைன் பிராவோ பந்தை அடித்து கிழித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் 7 பந்துகளில் 23 ரன்கள் அடித்து நொறுக்கினார், சென்னை சூப்பர் கிங்ஸ் 156 ரன்களை குவித்தது. மும்பை இந்தியன்ஸ் பிராவோ, தீபக் சாகர் வேற லெவல் பவுலிங்கில் 136 ரன்களுக்குள் சுருண்டது.

மும்பை மற்றும் சென்னை அணி விளையாடுவதற்கு முன்னரே ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்தப்பேட்டியில் மும்பை தான் ஐபில் தொடரை வெல்லும் எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் போட்டியின் நடுவே 7/3 என சிஎஸ்கே இருந்த நிலையில் சேவாக் கடும் கிண்டலாக 'என்னப்பா இது கிரிக்கெட்டா, ஹாக்கியா...?' என கிண்டலாக ட்வீட் செய்தார். சேவாக் அவர்களின் இந்த ட்விட்டிற்கு சிஎஸ்கே ரசிகர்களும், நெட்டிசன்களும் கடுப்பாகி அவரின் ட்வீட் ரிப்ளை பக்கத்தில் அடித்து துவம்சம் செய்துவிட்டனர் என்றே சொல்லவேண்டும்.

'முன்னாள் இந்திய வீரரான நீங்கள் உங்களின் தரத்தை கீழே இறக்கும் வகையில் ட்வீட் செய்யாதீர்கள்', 'சேவாக் உங்கள் மரியாதையை இழந்து விடாதீர்கள்' என பலரும் அவரை கடிந்து பதிலளித்தனர்.

அதோடு, நேற்றைய ஆட்டத்தில் களமிறங்கிய சவுரவ் திவாரி உடற்கட்டு குறித்து கவலை கொள்ளாமல் இருந்த காரணத்தினால் அவரால் உற்சாகமாக விளையாட முடியவில்லை.

சி.எஸ்.கே அவரை விக்கெட் எடுக்காமல் இருந்த நிலையில், அவர் 50 ரன்கள் எடுத்து ஆட்ட முடிவில் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்